நீதிமன்றத்தை அவமதித்தாரா சூர்யா? தலைமை நீதிபதிக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி கடிதம்
நடிகர் சூர்யா நேற்று நீட்தேர்வு குறித்தும் அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த அறிக்கையில் கொரோனா வைரஸ் பயம் காரணமாக நீதிபதிகள் பாதுகாப்பாக வீட்டில் இருந்துகொண்டே தீர்ப்பு வழங்குகின்றனர். ஆனால் மாணவர்கள் மட்டும் அச்சமின்றி தேர்வு எழுத வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளனர் என்று கூறியிருந்தார். இந்த கருத்து நீதிமன்ற வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் இதுகுறித்து நீதிபதி உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியம் அவர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதில் சூர்யாவின் இந்த கருத்து நீதிமன்றம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை அவமதிப்பது போல் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் மரியாதை போய்விடும் என்று கூறியுள்ளார்
நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியம் அவர்களின் இந்த கடிதத்தை அடுத்து சூர்யா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்