ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது! சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்குமாறு சரவணன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சற்றுமுன் வெளியான தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த ஜெயலலிதா, ஏ.கே.போஸ் வேட்புமனுவில் கைரேகை வைத்திருந்தார். ஜெயலலிதாவின் கைரேகைக்க்கு அரசு மருத்துவர் பாலாஜி அளித்த சான்றிதழ் செல்லாது என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு அளித்தார்.

ஆனால் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுகவின் ஏ.கே.போஸ் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.