போஸ்டர் அடிச்சதெல்லாம் வேஸ்ட்டா? அரியர் தேர்வுகளை நடத்த ஐகோர்ட் உத்தரவு

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது என்பது தெரிந்ததே. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அரியர் தேர்வுகள் ரத்து என்ற உத்தரவை ஏற்க முடியாது என்றும் உடனடியாக தேர்வை நடத்த பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி வந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்லூரிகளில் வகுப்புகள் நடைபெறவில்லை. இதனையடுத்து கலைக்கல்லூரிகளில் முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டின் தேர்வுகளை ரத்து செய்வதாகவும் அரிய்ர் உள்பட தேர்வு கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் பாஸ் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்பட ஒரு சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற அமர்வு இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு அரியர் உள்பட தேர்வு கட்டணம் செலுத்தினால் பாஸ் என்ற உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எனவே கல்லூரி மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு நடைமுறையை பின்பற்றி தேர்வுகள் நடத்த தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் கல்வியின் தரத்தில் எந்த சமரசமும் செய்ய முடியாது என்றும் இது குறித்து தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு கலந்து பேசி ஒரு சிறந்த முடிவை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

அரியர் கட்டணம் செலுத்திய மாணவர்கள் உள்பட அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பின் காரணமாக மாணவர்கள் உற்சாகமாகி தமிழக முதல்வருக்கு போஸ்டர் மற்றும் கட்-அவுட்டுகள் எல்லாம் வைத்தனர் என்பதும் ஆனால் அவை அனைத்தும் வேஸ்ட்டா? என நெட்டிசன்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மீண்டும் 4000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் இவ்வளவா?

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் இன்று மட்டும் தமிழகத்தில் 3986 பேர்களுக்கு புதிதாக கொரோனா

கருப்பு சிவப்பு சைக்கிளில் ஏன் வந்தார் விஜய்? இதுதான் காரணம்!

தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்களிக்க வந்த தளபதி விஜய் சைக்கிளில் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே

ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நடிகை ராதிகாவுக்கு ஏற்பட்ட திடீர் சோதனை!

காசோலை மோசடி வழக்கில் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகிய இருவருக்கும் சிறப்பு நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறப்பு ஜெயில் தண்டனை விதித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் நாயகியாகும் 'குக் விக் கோமாளி' பிரபலம்!

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான 'பிகில்' திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் அடுத்த படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.

செக் மோசடி....சரத், ராதிகா-வுக்கு ஓராண்டு சிறை தண்டனை....!

நடிகர்கள் ராதிகா,சரத் குமார் தம்பதிக்கு, செக் மோசடி காரணமாக ஓராண்டு சிறை தண்டனை விதிக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.