லதாரஜினி பள்ளி குறித்து நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

  • IndiaGlitz, [Tuesday,August 22 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் பள்ளியின் கட்டிடத்திற்கு கடந்த சில வருடங்களாக வாடகை தரவில்லை என்று கூறி அந்த கட்டிடத்தின் உரிமையாளர் கடந்த 16ஆம் தேதி பூட்டு போட்டார். இதனால் அந்த பள்ளியின் மாணவர்கள் தற்காலிகமாக வேளச்சேரி பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில் லதாரஜினி பள்ளியின் செயலாளர் ஐஸ்வர்யா தனுஷ் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பள்ளியின் கட்டிடத்திற்கு அதன் உரிமையாளர் பூட்டுப் போட்டதால் பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், அந்த உரிமையாளர் இழப்பீடாக ரூ.5 கோடி ரூபாய் தர உத்தரவிட வேண்டும் என்றும் பள்ளியின் பூட்டை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, 'மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கட்டட உரிமையாளருக்கு உத்தரவிட்டதோடு, பிற்பகல் 3 மணிக்குள் பள்ளிக் கட்டடத்தின் சீல் அகற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து வழக்கறிஞர் ஆணையர் குழு நேரில் ஆய்வு செய்து தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

More News

விஜய் சேதுபதி- நயன்தாரா பீரியட் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'கைதி நம்பர் 150' கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று அவருடைய பிறந்த நாள் அன்று அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவு வாபஸ்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அதிரடி

அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் என மூன்று அணிகள் இருந்த நிலையில் நேற்று ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் அதிகாரபூர்வமாக இணைந்தது.

புலியுடன் மோதிய 'மெர்சல்' விஜய்யின் துணிச்சல்

கோலிவுட் திரையுலகில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் என்னதான் அழுத்தமான கதை, திரைக்கதை இருந்தாலும் ஹிரோக்கள் ரிஸ்க் எடுத்து நடித்தால் தான் படம் வெற்றி பெறும் என்பது சமீபத்திய வெற்றிப்படங்கள் நிரூபித்துள்ளன.

ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைப்பு குறித்து கமல்ஹாசன் விமர்சனம்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசு குறித்தும், அமைச்சர்கள் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்து வருகிறார்.

பாஜகவில் இணைந்த ரஜினி பட தயாரிப்பாளர்

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் கடந்த சில வருடங்களாக கோலிவுட் திரையுலகினர் பலர் இணைந்து வருகின்றனர்.