நிலமோசடி விவகாரம்: சூரியின் அடுத்தகட்ட நடவடிக்கை

  • IndiaGlitz, [Wednesday,October 28 2020]

சமீபத்தில் நடிகர் சூரி, பிரபல நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான ரமேஷ் குடவாலா மீது நில மோசடி புகார் கொடுத்தார் என்பதும், இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ரமேஷ் குடவாலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் என்ற செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலாவுக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூரி தரப்பில் மனுத்தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் சூரி தனது மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நடிகர் விஷ்ணு விஷால் தந்தை தயாரித்த ’வீர தீர சூரன்’ என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக சூரி ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்றும், அவருக்கு 40 லட்சம் சம்பளத்துக்கு பதிலாக சிறுசேரியில் ஒரு நிலத்தை தருவதாகவும் அதற்காக கூடுதலாக சூரி 2 கோடியே 70 லட்சம் வாங்கி கொண்டதாகவும், ஆனால் நிலத்தை வாங்கித் தராமல் விஷ்ணுவிஷாலின் தந்தை இழுத்தடித்ததாக போலீசில் சூரி புகார் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமிழக ரசிகருக்காக கடலூர் வருவாரா தல தோனி?

தமிழகத்தைச் சேர்ந்த தீவிரமான ரசிகர் ஒருவர் தனது வீட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறமான மஞ்சள் நிறமாக மாற்றினார் என்றும், தனது வீட்டின் சுவரில் தோனியின் புகைப்படங்களை வரைந்தார்

ஒரே நாளில் வெளியான விஷாலின் மூன்று படங்கள் குறித்த அப்டேட்!

விஷால் நடித்த 'சக்ரா', துப்பறிவாளன் 2 ' மற்றும் ஆர்யாவுடன் அவர் நடிக்கும் படம் என மூன்று படங்களின் அப்டேட்டுக்கள் ஒரே நாளில் வெளிவந்திருப்பது விஷால் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆன 17 வயது சிறுவன்: விருதுநகரில் பரபரப்பு

விருதுநகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆன விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வித்தியாசமான விநாயகர் சிலைகளுடன் கொலு… அசத்தும் சென்னை பெண்!!!

நவராத்திரி வழிபாடுகளில் மிகவும் சிறப்பாக பார்க்கப்படுவது கொலு வழிபாடு. இந்தக் கொலு வழிபாடு வேறுபாடு உள்ள இந்த சமூகத்தில்

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை மூலிகை தாவரம்…

எக்கினாப்ஸ் எனும் வகையைச் சார்ந்த 2 புதிய மூலிகை வகை செடியை விஞ்ஞானிகள் வடக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் புதிதாகக் கண்டுபிடித்து உள்ளனர்.