'மாவீரன்' படத்தை தடை செய்ய அரசியல் கட்சி தொடர்ந்த வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

  • IndiaGlitz, [Wednesday,July 12 2023]

’மாவீரன்’ படத்தில் தங்கள் அரசியல் கட்சியின் கொடி பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், எனவே இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று ஐஜேகே என்ற கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில் ’நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ படத்தை வெளியிட தடை இல்லை. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் எந்த அரசியல் கட்சியையும் குறிப்பிடவில்லை என 40 வினாடிகள் பொறுப்புத்துறப்பு போட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

மேலும் ஐஜேகே கட்சியின் கொடியை பிரதிபலிக்காதவாறு காட்சிகளை மாற்றி அமைத்த பின்னர் ஓடிடி மற்றும் சேட்டிலைட் சேனல்களில் வெளியிட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

நாளை மறுநாள் ’மாவீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ள 'மாவீரன்’ படத்தில் மிஷ்கின், யோகி பாபு, சுனில் உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் நடிகை சரிதா ஒரு முக்கிய குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

நயன்தாராவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்: விக்னேஷ் சிவனுக்கு எச்சரிக்கை விடுத்த ஷாருக்கான்..!

ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருக்கும் நிலையில் 'நயன்தாராவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்' என விக்னேஷ் சிவனுக்கு

மொழி தெரியாத நடிகைகளுக்கு ஏன் வாய்ப்பு தரவேண்டும்? பகீர் கருத்து வெளியிட்ட இளம் நடிகை!

தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்துவரும் இளம் நடிகை ஒருவர் சினிமாவில் மொழி தெரிந்த நடிகர், நடிகைகளை நடிக்க வைப்பதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பி சில முக்கிய கருத்துகளை வெளியிட்டுள்ளார்

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் 'ஜெயிலர்' பிரபலம்.. இயக்குனர் பெயர் அறிவிப்பு..!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிக்கும் நாயகன் மற்றும் இயக்குனர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி

ரூ.200 கோடி மோசடி வழக்கில் சிக்கிய ‘பிரியாணி‘ பட நடிகை… ஜாமீன் கேட்ட நிலையில் தீர்ப்பு!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய ‘பிரியாணி’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த நடிகை ஒருவர் மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர் ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்தார்

விக்னேஷ் சிவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தல தோனி.. க்யூட் வீடியோ..!

தல தோனி சமீபத்தில் சென்னைக்கு அவர் தயாரித்த 'எல்ஜிஎம்' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார் என்பதும் அந்த விழா சிறப்பாக நடைபெற்றது என்பதையும் பார்த்தோம்.