45 வயது நபருக்கு 23 வயது பெண்ணுடன் திருமணம்: 25 வருடங்கள் கழித்து நடந்த விபரீதம்!

  • IndiaGlitz, [Saturday,October 10 2020]

45 வயது நபர் ஒருவருக்கு 23 வயது பெண்ணுடன் 25 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் தற்போது அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள விபரீதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த்யுள்ளது

சென்னை செம்மஞ்சேரி என்ற பகுதியை சேர்ந்த 45 வயது நாராயணன் என்பவருக்கும் 23 வயது மனோன்மணி என்பவருக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். இருவருக்குமிடையே வயது வித்தியாசம் 22 வருடங்கள் என்பதால் மனப் பொருத்தம் இல்லாமல் இருந்துள்ளதாகவும் அதுமட்டுமின்றி நாராயணன் தனது மனைவியை அவ்வப்போது சந்தேகம் அடைந்து உள்ளார் என்றும் தெரிகிறது

கடந்த பல வருடங்களாக இருவருக்கும் இதுகுறித்து அடிக்கடி சண்டை வந்துள்ள நிலையில் நேற்று திடீரென தற்போது 70 வயதாக இருக்கும் நாராயணன் மனைவியுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த நாராயணன் வீட்டின் வெளியே இருந்த ஒரு பெரிய கல்லை எடுத்துக் கொண்டு வந்து மனோன்மணியின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். அதன் பின்னர் கொலை செய்து விட்டோம் என்ற பயத்தில் அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 22 ஆண்டு இடைவெளியில் பொருந்தா திருமணம் செய்த தம்பதிகளுக்கு 25 வருடம் கழித்து நேர்ந்த விபரீதத்தால் செம்மஞ்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது