சென்னை வாக்காளர்களுக்கு என்ன ஆச்சு? தமிழத்திலேயே குறைந்த சதவீதம்!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவிக்கையில் தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 70.90% வாக்குப்பதிவும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.62% வாக்குப்பதிவும் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது தமிழகத்தில் 73.58% வாக்குகள் பதிவான நிலையில் இம்முறை வாக்கு சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சென்னையின் மூன்று தொகுதிகளிலும் வாக்கு சதவீதம் மிகவும் குறைந்துள்ளது. தென்சென்னையில் 57.43 சதவிகிதமும், மத்திய சென்னையில் 57.86 சதவிகிதமும், வட சென்னையில் 61.76 சதவிகிதமும், பதிவாகியுள்ளது. தமிழகத்திலேயே தென்சென்னை மற்றும் மத்திய சென்னையில்தான் குறைவான சதவிகிதத்தில் வாக்குப்பதிவு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவிற்கும் தமிழத்திலேயே சென்னையில் தான் அனைத்து வாக்குப்பதிவு மையங்களும் நடந்து செல்லும் அளவுக்கு குறைவான தூரங்களில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் சென்னை மக்கள் சுமார் 40 சதவிகிதத்தின் வாக்களிக்க வரவில்லை.

ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிகம் அரசியல் பேசும் சென்னைவாசிகள், நிஜத்தில் ஜனநாயக கடமை ஆற்றுவதில் தவறியுள்ளனர் என்பது வருத்தத்திற்குரிய ஒன்று என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் குழப்பம் இருந்தது, கடுமையான வெயில் ஆகியவையே வாக்குப்பதிவு குறைந்ததற்கான காரணமாக கூறப்படுகிறது.

More News

ஓட்டு போட்டவுடன் துள்ளி குதித்த நடிகர் வடிவேலு!

நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில் திரையுலகினர் உள்பட அனைவரும் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர். 

வெளியானது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: திருப்பூர் மாவட்டம் முதலிடம்

இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் தேர்வு முடிவுகள் வெளியானது

சிவகார்த்திகேயன் என்ன ஸ்பெஷலா? தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்

நேற்று நடைபெற்ற மக்களவை தேர்தலில்  நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் ஓட்டு போட சென்றபோது, சிவகார்த்திகேயனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை: அதிர்ச்சியில் சென்னை பெண் மரணம்

இந்த தேர்தல் மட்டுமின்றி ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் ஒருசிலரால் ஓட்டு போட முடியாத நிலை இருந்து வருகிறது.

ஓட்டு போட முடியாத சிவகார்த்திகேயன்!

ஒவ்வொரு வாக்காளரும் தவறாமல் ஓட்டு போட வேண்டும் என்று வலியுறுத்தும் தேர்தல் ஆணையம் தனது கடமையை சரியாக செய்துள்ளதா? என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது