சிம்பு ரசிகர்களால் கதிகலங்க போகுதா காசி தியேட்டர்?

  • IndiaGlitz, [Wednesday,August 12 2015]

பல்வேறு தடைகளை தாண்டி வரும் வெள்ளியன்று பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள 'வாலு' திரைப்படம் குறித்துதான் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகிவருகிறது. இந்நிலையில் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் 'வாலு' திரைப்படத்தை எந்த தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சியை காண விரும்புகின்றீகள் என்ற கேள்வியை முன்வைத்துள்ளார். இதற்கு பெரும்பாலான ரசிகர்கள் சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள காசி தியேட்டர் என்ற பதிலை அளித்துள்ளனர். எனவே வரும் 14ஆம் தேதி சென்னை காசி தியேட்டர் கதிகலங்க போவது உண்மை என தெரிகிறது.

சென்னை காசி தியேட்டரில்தால் பல திரையுலக பிரபலங்களும் தாங்கள் நடித்த படத்தின் முதல் நாள் ரெஸ்பான்ஸ் எப்படி உள்ளது என்பதை பார்க்க வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ள 'வாலு' திரைப்படத்தை விஜய்சந்தர் இயக்கியுள்ளார். தமனின் இசையில் உருவான இந்த படத்தின் முன்பதிவு சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

More News

சிம்புவின் 'வாலு'வுக்கு குவியும் வாழ்த்துக்கள்

பலவிதமான தடைகளை தாண்டி சிம்புவின் 'வாலு' திரைப்படம் வரும் 14ஆம் தேதி வெற்றிகரமாக உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது...

சென்னை, கும்பகோணம், பொள்ளாச்சியில் அரண்மனை 2

கோலிவுட்டில் பேய்ப்பட சீசன் தொடங்கிய ஆரம்பகட்டத்தில் வெளிவந்த சுந்தர் சியின் 'அரண்மனை' சூப்பர்ஹிட் ஆகியதை தொடர்ந்து....

அப்துல் கலாமுக்கு சமர்ப்பணம் செய்யும் 'கோ 2' படக்குழுவினர்

பாபிசிம்ஹா நடித்து வரும் "கோ 2" படக்குழுவினர் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களுக்கு ஒரு பாடலை விரைவில் சமர்ப்பணம் செய்யவுள்ளனர்...

'விஜய் 59' படத்தில் எம்.ஜி.ஆர் பாடல்கள்?

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது...

VSOP நடிகைக்கு ஆகஸ்ட் 30ஆம் தேதி திடீர் திருமணம்.

பிரபல இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த 'தாமிரபரணி' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை பானு...