நடிகர் செந்தில் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தது ஏன்?

  • IndiaGlitz, [Wednesday,September 06 2017]

பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில், தினகரன் அணியின் ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் தினகரனை அவரது வீட்டில் சந்தித்த செந்தில், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அந்த பேட்டியின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியின் ஆதரவாளரும், திருச்சி எம்பியுமான குமாரை அவதூறான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த பேட்டியின் வீடியோ விவரங்களை சேகரித்த குமார் தரப்பினர் தற்போது செந்தில் மீதும், செந்திலை தூண்டியதாக தினகரன் மீதும் புகார் மனு கொடுத்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படியில் செந்தில் மற்றும் தினகரன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனால் விரைவில் நடிகர் செந்திலை போலிசார் விசாரணைக்கு அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மலையாள நடிகர் திலீப்புக்கு 2 மணி நேரம் பரோல்

பிரபல மலையாள நடிகை ஒருவரை காரில் கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவத்திற்கு மூலகாரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரபல மலையாள நடிகர் திலீப் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்...

நீட் தேர்வு எதிர்ப்பாளர்களை கிண்டலடித்துள்ள பிரபல நடிகர்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில்...

பிரபுசாலமன் இயக்கும் 'கும்கி 2' படம் குறித்த முக்கிய தகவல்

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம்பிரபு, லட்சுமிமேனன் நடித்த 'கும்கி' திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வெற்றியை பெற்றது...

மாதந்தோறும் குண்டு வெடிக்கும்! நீட் போராட்டக்காரர்கள் அனுப்பிய மொட்டை கடிதமா?

அனிதாவின் மரணத்திற்கு பின்னர் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருவதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெரும் பரபரப்பில் உள்ளது.

சினேகனை வார்த்தைகளால் புரட்டி எடுத்த டிரிகர் சக்தி

பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் அனைவருமே சினேகன் மீது ஆரம்பத்தில் இருந்தே ஒருவித மரியாதை கலந்த ஒரு அன்பு வைத்திருந்தனர்.