ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது?

  • IndiaGlitz, [Tuesday,June 06 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததால் அவரது தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வாக்காளர்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா செய்ததாக ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திற்கு புகார் வந்ததையடுத்து இடைத்தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டது.

ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்தால் அந்த தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில் நேற்றுடன் ஜெயலலிதா மறைந்து ஆறுமாத காலம் முடிந்துவிட்டது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலை நடத்துவது எப்போது என்பது குறித்து தேர்தல் ஆணையம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.

ஆர்.கே.நகரில் சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடக்கும் என்ற நிலை எப்போது ஏற்படுமோ அப்போதுதான் அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே இப்போதைக்கு அங்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்பதையே இது காட்டுகிறது.

More News

பிரபல நடிகரின் மகனுக்கு கைகொடுத்து உதவும் சிவகார்த்திகேயன்

பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி அறிமுகமாகும் 'அதாகப்பட்டது ஜனங்களே' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து வரும் 16ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி: 2 வரிகளில் பயோடேட்டா அனுப்பிய சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து புதிய பயிற்சியாளர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

இந்த வருட பிறந்த நாள் உண்மையிலேயே விஜய்க்கு ஸ்பெஷல்தான்!

இந்த நிலையில் தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக ஒரு தமிழ் நடிகரின் பிறந்த நாளுக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள திரையரங்கில் சிறப்புக்காட்சி திரையிடப்படவுள்ளது

சென்னை மக்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் தரும் மகிழ்ச்சியான செய்தி

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக வெயில் வாட்டி எடுத்தது. குறிப்பாக சென்னையில் தினமும் 100 டிகிரி செல்ஷியசை வெப்பம் தாண்டியதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

முதல்வர்-சபாநாயகர் அவசர சந்திப்பு: 9 மாவட்ட எம்.எல்.ஏக்களுடனும் திடீர் ஆலோசனை

ஏற்கனவே அதிமுக, ஓபிஎஸ் அணி மற்றும் சசிகலா அணி என இரண்டாக உடைந்திருக்கும் நிலையில் இன்று முதல் தினகரன் அணி என்ற புதிய அணி உருவாகி அதற்கு தற்போது 21 எம்.எல்.ஏக்கள் ஆதரவும் கொடுத்துள்ளனர்