close
Choose your channels

சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிந்து விழுந்தது. தி.நகரில் பெரும் பரபரப்பு

Wednesday, May 31, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று அதிகாலை முதல் சென்னை தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த தீயை அணைக்க கடந்த 15 மணி நேரமாக தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

இந்த தீவிபத்தால் ஏற்பட்ட வெப்பம் காரணமாக கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதால் எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்து விழ வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன்னர் கட்டிடத்தின் முகப்பு பகுதியில் நான்காவது மாடியில் 15 அடி நீள சுவர் இடிந்து கீழே விழுந்தது. இதனால் முதல்கட்டமாக கட்டிடத்தின் முன்பகுதியில் தீயை அணைக்கும் வீரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இருப்பினும் கட்டிடத்தின் பின்பகுதியில் தீயை அணைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

மேலும் இரவு நேரம் என்பதால் கட்டிடத்தின் அனைத்து மாடிகளிலும் தீ கொளுந்துவிட்டு எரிவதை தற்போது தெளிவாக பார்க்க முடிகிறது என்றும், இந்த வெப்பத்தின் காரணமாக முழு கட்டிடமும் இடிந்து விழ வாய்ப்பு இருக்கின்றது என்பதால் அருகில் உள்ள கட்டிடத்தில் உள்ளவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.