4 தளத்திற்கு அனுமதி பெற்று 7 தளங்கள் கட்டிய சென்னை சில்க்ஸ்: நடவடிக்கை உறுதி என அமைச்சர் தகவல்

  • IndiaGlitz, [Thursday,June 01 2017]

சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையின் 7 மாடி கட்டிடத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டு 24 மணி நேரத்திற்கும் மேல் எரிந்து கொண்டிருக்கின்றது. இந்த கட்டிடத்தின் பல பகுதிகள் இடிந்துவிட்ட நிலையில் மொத்த கட்டிடத்தையும் இடிக்க அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்
இந்த நிலையில் சென்னை சில்க்ஸ் கட்டிடம் 4 மாடிகள் மட்டுமே கட்ட அனுமதி பெற்றுவிட்டு 7 மாடிகள் வரை கட்டி விதிமுறைகளை மீறியுள்ளதாக நகர்புற வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'சென்னை சில்க்ஸ் கட்டிடம் விதிகளை மீறி கட்டப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. தரை தளம் தொடங்கி நான்கு தளங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில் சென்னை சில்க்ஸ் உரிமையாளர்கள் விதிகளை மீறி 7 தளங்கள் வரை கட்டியுள்ளனர். விதிமுறைக்கு புறம்பாக கட்டிய தளங்களை இடிக்க ஏற்கனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இடிக்கும் பணியும் கடந்த 2006ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால் கட்டிட உரிமையாளர்கள் நீதிமன்றத்திற்கு சென்று தடையாணை பெற்ற்றதால் இடிக்கும் பணி அப்போது நிறுத்தப்பட்டது
மேலும் கடந்த 2011ஆம் ஆண்டு தி.நகரில் விதிமுறைகளை மீறி கட்டிய 25 பெரிய வணிக நிறுவன கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இவற்றில் ஒன்று சென்னை சில்க்ஸ் கட்டிடம் ஆகும். ஆனால் 25 கட்டிட உரிமையாளர்களும் நீதிமன்றம் சென்றதால் நீதிமன்ற உத்தரவின்படி சீல் அகற்றப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் ஒரு குழு அமைக்கப்பட்டு தி.நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து கணக்கெடுத்து அவற்றை இடிக்கும் நடவடிக்கையை அரசு விரைவில் மேற்கொள்ளும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.

More News

தீ விபத்தில் சிக்கிய 250 கிலோ நகைகளை மீட்பது எப்படி? போலீசார் ஆலோசனை

சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடம் இரண்டாவது நாளாக கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது...

ரோஜர்மூரை அடுத்து ஜேம்ஸ்பாண்ட் பட நடிகை மரணம்

பிரபல ஜேம்ஸ்பாண்ட் நடிகர் ரோஜர்மூர் கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் காலமானார் என்பதை பார்த்தோம்...

டிடிவி தினகரன் ஜாமீன் மனு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக குறுக்கு வழியில் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற...

தொடை காட்டுவது எங்கள் ஜீனிலேயே உள்ளது. பிரியங்கா சோப்ரா பதிலடி

பாரத பிரதமர் நரேந்திரமோடியை சமீபத்தில் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா...

அரசுடைமை ஆகுமா ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம்?

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேர்களும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதோடு...