தீ விபத்தில் சிக்கிய 250 கிலோ நகைகளை மீட்பது எப்படி? போலீசார் ஆலோசனை

  • IndiaGlitz, [Thursday,June 01 2017]

சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடம் இரண்டாவது நாளாக கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. கட்டிடத்தின் பெரும்பகுதி இடிந்து விழுந்துவிட்டபோதிலும் தீயை இன்னும் முற்றிலும் அணைக்க முடியவில்லை. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையின் ஒரு அங்கமாக ஸ்ரீகுமரன் தங்கமாளிகையும் உள்ளது. இந்த நகைக்கடையில் உள்ள தங்கம் என்ன ஆகியிருக்கும் என்பது குறித்த செய்தியை நேற்று பார்த்தோம்
நாம் நேற்றே கூறியபடி குமரன் நகைக்கடையின் கீழ்த்தளத்தில் உள்ள லாக்கரில் சுமார் 250 கிலோ நகைகள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த லாக்கர் சுமார் 1000 டிகிரி வெப்பத்தையும் தாங்கும் சக்தி படைத்தது என்பதால் இதில் இருக்கும் நகைகளுக்கும் தங்கக்கட்டிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டிருக்காது என்றும், கட்டிடத்தை இடிக்கும் முன்னர் அந்த லாக்கரை தீயணைப்பு படையினர்களும், போலீசார்களும் பத்திரமாக மீட்டு தர வேண்டும் என்றும் கடை உரிமையாளர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
எனவே கடை உரிமையாளரின் கோரிக்கையை ஏற்று தீயணைக்கும் பணி முடிந்த பின்னர் நகைகள் அடங்கிய லாக்கரை மீட்பது எப்படி என்பது குறித்து போலீசார் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

More News

ரோஜர்மூரை அடுத்து ஜேம்ஸ்பாண்ட் பட நடிகை மரணம்

பிரபல ஜேம்ஸ்பாண்ட் நடிகர் ரோஜர்மூர் கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் காலமானார் என்பதை பார்த்தோம்...

டிடிவி தினகரன் ஜாமீன் மனு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக குறுக்கு வழியில் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற...

தொடை காட்டுவது எங்கள் ஜீனிலேயே உள்ளது. பிரியங்கா சோப்ரா பதிலடி

பாரத பிரதமர் நரேந்திரமோடியை சமீபத்தில் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா...

அரசுடைமை ஆகுமா ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம்?

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேர்களும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதோடு...

அடுத்த கட்டத்தை நோக்கி தல அஜித்தின் 'விவேகம்'

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பல்கேரியா உள்பட ஐரோப்பிய நாடுகளில்...