வேலைக்கு சேர்ந்த முதல் நாளே ஐடி பெண் ஊழியர் மரணம் அடைந்தது எப்படி? அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Saturday,September 21 2019]

சென்னை அம்பத்தூரில் ஹெச்.ஆர். பணியில் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே தனிதா ஜூலியஸ் என்ற இளம்பெண் எட்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி கேகே நகரை சேர்ந்த தனிதா ஜூலியஸ் கடந்த சில வருடங்களுக்கு முன் சென்னைக்கு வேலை நிமித்தமாக வந்து வடபழனியில் உள்ள ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். அதன்பின்னர் அம்பத்தூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் ஹெச்.ஆர். ஆக பணிபுரிய வேலைக்கு அமர்ந்தார்.

இந்த நிலையில் வேலைக்கு சேர்ந்த முதல் நாளில் இவர் தன்னுடைய எட்டாவது மாடியில் உள்ள அலுவலகத்திற்கு மாடிப்படி வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது தனது மொபைல் போனில் தனது தந்தையுடன் வாட்ஸ்அப் சாட்டிங்கில் இருந்ததாகவும், அப்போது கவனக்குறைவாக அவர் எட்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை உறுதி செய்யும் வகையில் எட்டாவது மாடியில் அவரது செல்போன் மற்றும் காலில் இருந்த ஒரு செருப்பு இருந்ததாகவும், அவர் கீழே விழுந்த இடத்தில் இன்னொரு செருப்பும் இருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது வாட்ஸ் அப்பில் அவர் தந்தையுடன் சாட்டிங்கில் இருந்ததும் தெரியவந்தது. இதன் காரணமாக அவர் சாட்டிங் செய்து கொண்டே மாடிப்படிகளில் ஏறி கொண்டிருந்த போது தவறி விழுந்து இருக்கலாம் என தெரிகிறது.

இருப்பினும் சிசிடிவியை போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும், சிசிடிவி ஆய்வு செய்த பின்னரே அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறிக் கீழே விழுந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும் என போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

அஜித்தின் 'விவேகம்' தயாரிப்பாளர் மீது மோசடி புகார்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்சராஹாசன் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான 'விவேகம்' திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகியது.

'கோமாளி' வெற்றிப்பட நிறுவனத்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிய 'கோமாளி' திரைப்படம்

தர்ஷனுக்கு அடிபட்ட போது ஏன் உணர்ச்சிவசப்படவில்லை: கவினை மடக்கிய கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி வரும் நிலையில் கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் தங்கள் காதல் பிரச்சனையை ஒதுக்கி வைத்துவிட்டு டாஸ்க்கில் முழு கவனம் செலுத்த வேண்டும்

சிந்து சமவெளிக்கு முந்து சமவெளி: கீழடி குறித்து வைரமுத்து

கல்தோன்றி மண் தோன்றும் காலத்திற்கு முன்பே தோன்றியது தமிழ் நாகரீகம் என நமது முன்னோர்கள் கூறி வந்தாலும், வரலாற்று ஆய்வாளர்களின் குறிப்புப்படி

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: அரசியல் கட்சிகளின் ரியாக்சன்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் என சற்றுமுன் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது