close
Choose your channels

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. KKR அணிக்கு நன்றி சொன்ன தியேட்டர் ஓனர்.. கமல், லோகேஷ்க்கும் நன்றி

Saturday, April 12, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் உள்ள தியேட்டர் ஓனர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நன்றி தெரிவித்து ’இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே’ என ட்விட்டரில் பதிவு செய்திருப்பதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று சென்னையில் நடந்த சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி மிக மோசமாக பேட்டிங் செய்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பதும் இந்த இலக்கை கொல்கத்தா அணி வெறும் பத்து ஓவர்களில் அடித்து அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மைதானத்தில் மட்டும் தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சிஎஸ்கே அணி பெற்றது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் வெற்றி தியேட்டரின் புகைப்படத்தை பதிவு செய்து தங்களது அணி ’வெற்றி’ பெற்றதை குறிப்பிடும் வகையில் பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் இந்த தியேட்டரின் உரிமையாளர் ராகேஷ் கௌதம் தனது சமூக வலைத்தளத்தில் ’வாவ் இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே, மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக கருதுகிறோம். ஆனால் இதற்கு எல்லாம் இயக்குனர் லோகேஷ் மற்றும் கமல்ஹாசன் அவர்கள் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படத்தில் வெற்றி தியேட்டர் சில காட்சிகள் வருவதை அடுத்து இந்த அதிசயம் நடந்ததை அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment