சென்னை வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து. ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி

  • IndiaGlitz, [Monday,May 08 2017]

சென்னை வடபழனி பகுதியில் சிவன் கோவில் தெற்கு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு சிறுவர்கள் உள்பட நான்கு பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் ஐந்துபேர் படுகாயம் அடைந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மின்கசிவு காரணமாக முதலில் குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களில் தீப்பிடித்ததாகவும், அந்த தீ படிப்படியாக குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவியதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மீனாட்சி, சஞ்சய், செந்தில், சந்தியா ஆகியோர் உயிரிழந்துள்ளதாகவும், இவர்கள் நால்வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் உடனே சம்பவ இடத்திற்கு வந்த சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், தீ விபத்தில் காயமடைந்தோருக்கு உரிய உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

More News

நீட் தேர்வில் அராஜகத்தின் உச்சகட்டம். உள்ளாடையை அகற்றி சோதனை செய்த கொடுமை

நேற்று இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் இந்த தேர்வு சென்னை, கோவை, திருச்சி, மதுரை உட்பட 8 மாநகரங்களில் நடைபெற்றது...

'பாகுபலி 2' சுனாமியிலும் தப்பிய தனுஷ்-தன்ஷிகா படங்கள்

கடந்த மாதம் 28ஆம் தேதி இந்தியாவின் 90% திரையரங்குகளில் 'பாகுபலி 2' திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த படத்தின் சுனாமி வசூல் காரணமாக பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதையும், ஒருசில படங்களின் வசூல் அடிபட்டதும் அனைவரும் அறிந்ததே...

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'பாட்ஷா' நாயகி திடீர் சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை கடந்த சில மாதங்களாகவே பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை நிமித்தம் சந்தித்து வருகின்றனர். விரைவில் தேர்தல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரஜினியை அரசியலுக்கு இழுக்க பாஜக உள்பட பல கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன...

ஒவ்வொரு ரசிகரையும் ஆரத்தழுவி மகிழ்கிறேன். 'பாகுபலி 2' வெற்றிக்கு பிரபாஸ் நன்றி

இந்திய திரையுலகில் ரூ.1000 கோடி வசூல் செய்த படம் கொடுத்த ஒரே நாயகன் என்ற பெருமையை பெற்றவர் 'பாகுபலி' புகழ் பிரபாஸ். இந்த படங்களின் இரண்டு பாகங்கள் வருவதற்கு முன்னர் தெலுங்கு மாநிலங்களில் மட்டுமே பிரபலமாக இருந்த பிரபாஸ், இந்த இரண்டு படங்களுக்கு பின்னர் உலகமே பேசும் நாயகனாகிவிட்டார்...

'பாகுபலி' போன்ற திரைப்படம் எடுக்க முடியுமா? ஏ.ஆர்.ரஹ்மானின் பதில்

கடந்த பத்து நாட்களாக எங்கு பார்த்தாலும் 'பாகுபலி' படத்தை குறித்த பேச்சாகவே நாடு முழுவதும் இருந்து வருகிறது. ரூ.1000 கோடி வசூல் செய்த இந்திய படம், குறிப்பாக தென்னிந்திய படம் என்பது நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டிய ஒரு விஷயம்...