சென்னை மக்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் தரும் மகிழ்ச்சியான செய்தி

  • IndiaGlitz, [Tuesday,June 06 2017]

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக வெயில் வாட்டி எடுத்தது. குறிப்பாக சென்னையில் தினமும் 100 டிகிரி செல்ஷியசை வெப்பம் தாண்டியதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், வெப்பச் சலனம் காரணமாக சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சற்றுமுன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக கருதப்படுகிறது.
இதுகுறித்து வெதர்மேன் மேலும் கூறியதாவது: "காற்றின் சுழற்சி சாதகமாக இருப்பதால் சென்னை உட்பட வட தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
சென்னையை வர்தா புயல் தாக்கி 6 மாதங்கள் ஆகிய நிலையில் சென்னையில் இந்த மூன்று நாட்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோல் கர்நாடகா மாநிலம் குடகு பகுதியிலும் மழைக்கு வாய்ப்பிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
வெதர்மேன் அறிவித்த ஒருசில நிமிடங்களிலேயே சென்னையின் சில பகுதியில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அக்னி நட்சத்திரம் முடிந்து பருவமழையும் நெருங்கிவிட்ட நிலையில் இனி வெப்பத்தில் இருந்து பொதுமக்கள் விடுதலை அடைந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.

More News

முதல்வர்-சபாநாயகர் அவசர சந்திப்பு: 9 மாவட்ட எம்.எல்.ஏக்களுடனும் திடீர் ஆலோசனை

ஏற்கனவே அதிமுக, ஓபிஎஸ் அணி மற்றும் சசிகலா அணி என இரண்டாக உடைந்திருக்கும் நிலையில் இன்று முதல் தினகரன் அணி என்ற புதிய அணி உருவாகி அதற்கு தற்போது 21 எம்.எல்.ஏக்கள் ஆதரவும் கொடுத்துள்ளனர்

தினகரனுக்கு குவியும் எம்.எல்.ஏக்கள் ஆதரவு: சென்னையில் ஒரு கூவத்தூர்?

திகார் ஜெயில் இருந்து திரும்பி வந்த தினகரன் நேற்று பெங்களூர் சென்று சசிகலாவை சந்தித்துவிட்டு வந்தது முதலே தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

கலையரசன் - தன்ஷிகாவின் 'உரு'. திரை முன்னோட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' வெற்றிப்படத்தில் நடித்த கலையரசன் மற்றும் தன்ஷிகா மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் 'உரு'. தமிழில் வித்தியாசமான த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தை விக்கி ஆனந்த் இயக்கியுள்ளார். கலையரசன், தன்ஷிகா, மைம் கோபி, ஜெயபாலன் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜோஹன் ஷிவனேஷ் இ&

தினகரன் அணியில் 18 எம்.எல்.ஏக்கள்: விரைவில் சட்டமன்ற தேர்தலா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்த அதிமுக, கட்சியின் பெயரையும், சின்னத்தையும் இழந்தது...

சாக்லேட் வியாபாரியின் வங்கிக்கணக்கில் திடீரென டெபாசிட் ஆன ரூ.18 கோடி

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது.