கொரோனாவில் இருந்து முற்றிலும் மீண்ட சென்னை வாலிபர்: ஒரு மகிழ்ச்சியான செய்தி 

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில், ஒரு ஆறுதல் செய்தியாக தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் ஒருவர் முற்றிலும் குணமடைந்து உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் இருந்து சென்னைக்கு சமீபத்தில் வந்த 21 வயது வாலிபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்ததன் பயனாக தற்போது அவர் முற்றிலும் குணமாகி விட்டார். அவருக்கு இரண்டு முறை இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டபோது இரண்டிலும் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதால் அவர் குணமடைந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் தனது வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்

ஏற்கனவே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவரும் மதுரையைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா வைரஸிலிருந்து மீண்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னை வாலிபர் ஒருவரும் கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமாகி உள்ளார் என்ற செய்தி அனைவருக்கும் ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போராடி வரும் தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றியின் ஒரு பகுதியே இது என்று சொல்லலாம்

More News

கேலிக்கூத்தாகிய ஊரடங்கு உத்தரவு: மூன்றாவது நிலைக்கு சென்றுவிட்ட இந்தியா

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவின் இரண்டாவது நிலையில் இருந்த போதே சுதாரித்த இந்திய அரசும் இந்தியாவில் உள்ள மாநில அரசுகளும் உடனடியாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தின.

கன்னியாகுமரியில் மேலும் ஒரு உயிரிழப்பு: கொரோனா காரணமா?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் திடீரென உயிரிழந்தார். ஆனால் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இல்லை

தாயின் மரணத்திற்கு கூட செல்லாமல் துப்புரவு பணியை தொடர்ந்த அதிகாரி

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் போன்றவர்களின்

கொரோனா வைரஸை விட கொடியது: ஐடி ஊழியரின் அட்டூழியம்

உலகமெங்கும் மிக மோசமாக பரவிவரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளின் அரசுகளும் தீவிரமாக செயல்பட்டு கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கின்றனர்.

மருத்துவமனைகளாக மாறும் இந்திய ரயில்கள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி