அஜித், விக்ரம், சூர்யா பட நடிகைக்கு 6 மாதம் ஜெயில்: நீதிமன்றம் உத்தரவு

  • IndiaGlitz, [Tuesday,July 23 2019]

அஜித் நடித்த அசல், சூர்யா நடித்த அயன், விக்ரம் நடித்த தூள், ஆகிய படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்தவர் நடிகை கொய்னா மித்ரா. இவர் மாடல் அழகி பூனம் செதி என்பவரிடம் கடன் வாங்கியுள்ளதாகவும், கடனை திருப்பிக்கொடுக்க கடந்த 2013-ம் ஆண்டு ரூ.3 லட்சத்திற்கான காசோலை ஒன்றை கொடுத்ததாகவும் தெரிகிறது

ஆனால் நடிகை கோய்னா மித்ரா கொடுத்த காசோலை, அவரது வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால் திரும்பி வந்தது. இதனை அடுத்து பூனம் செதி தொடுத்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில் நடிகை கொய்னா மித்ராவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.

மேலும் மாடல் அழகி பூனம் செதிக்கு ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் வட்டியுடன் சேர்த்து ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்தை நடிகை கோய்னா மித்ரா கொடுக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது