மறதி எப்போதும் மாறாதது தமிழனுக்கு: பிரசன்னாவின் டுவிட்டுக்கு பதிலளித்த இயக்குனர்

  • IndiaGlitz, [Sunday,July 05 2020]

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரபரப்பையும் மீறி கடந்த சில நாட்களாக ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணம், ஜெயப்பிரியா மரணம் ஆகியவை ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றது. இதுகுறித்த செய்திகள் சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த செய்திகள் குறித்து நடிகர் பிரசன்னா தனது டுவிட்டரில் கூறியதாவது: ’ஜெயலலிதா அல்லது ஜெயராஜ் அல்லது ஜெயப்பிரியா அடுத்த பரபரப்பான மரணம்/ கொலை/ கற்பழிப்பு செய்திகள் அடுத்த செய்தி வெளிவரும் வரை மட்டுமே. அதன் பின்னர் செய்திகளும் மாறுகிறது, ஹேஷ்டேக்குகளும் மாறுகிறது. ஆனால் உண்மையில் மாறவேண்டியது மட்டும் ஒருபோதும் மாறாமல் இருப்பது பெரும் சோர்வை அளிக்கிறது. மறதி ஒரு தேசிய வியாதி’ என்று குறிப்பிட்டுள்ளார்

பிரசன்னாவின் இந்த டுவிட்டுக்கு பதிலளித்த இயக்குனர் சேரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது: ’மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல மறதி எப்போதும் மாறாதது தமிழனுக்கு... எல்லாவற்றையும் அடுத்த செய்தியில் மறந்துவிடுவான் என்ற நம்பிக்கையால்தான் இத்தனை காலம் நடந்த அத்தனை பட்டாபிஷேகங்களும் நடத்தப்பட்டது’ என்று கூறியுள்ளார்.
 

More News

கீர்த்திசுரேஷின் அடுத்த படம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட 'தளபதி 65' இசையமைப்பாளர்

நடிகையர் திலகம் என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த 'பெண்குயின்' திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது என்பது தெரிந்ததே

நுழைவாயில் முதல் பாத்ரூம் வரை முழுக்க முழுக்க தங்கம்: வியட்நாம் தங்க ஹோட்டலின் ஆச்சரிய புகைப்படங்கள்!

வியட்நாமில் டன் கணக்கில் தங்கத்தினால் முலாம் பூசப்பட்டு உருவாக்கப்பட்ட ஹோட்டல் ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது

மத போதகரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட 10 ஆயிரம் பேர்: கொரோனா அச்சத்தால் 3 கிராமங்களுக்கு சீல் 

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் இதனை அடுத்து நாடு முழுவதும் உள்ள மக்கள் மாஸ்க் அணிய வேண்டும்,

வொர்க் ஃப்ரம் ஹோமில் இவ்வளவு சின்சியரா? மணமேடையிலும் லேப்டாப்பில் வொர்க் செய்யும் மணமகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பெரும்பாலான ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே வொர்க் ஃபிரம் ஹோம்

டிக் டாக் தடையால் மனநிலை பாதிப்படைந்த பிரபலம்: பிரதமர் மோடிக்கு வேண்டுகோள்

இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே சமீபத்தில் கால்வான் பள்ளத்தாக்கின் ஏற்பட்ட மோதல் காரணமாக சீனாவின் 59 செயலிகள் சமீபத்தில் தடை செய்யப்பட்டது.