சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வருக்கு சேரன் கூறிய ஐடியா

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போய்க் கொண்டிருக்கின்றது. நேற்று ஆயிரத்துக்கும் குறைவாக கொரோனா நோய் பாதிப்பு அடைந்தவர்கள் இருந்ததால் சென்னை ஓரளவு கொரோனாவில் இருந்து மீண்டு விட்டது என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இன்று திடீரென 1200க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையை விட்டு தப்பித்தால் போதும் என்று சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்றுகொண்டிருக்கின்றனர். ஆனால் இபாஸ் இல்லாததால் கெடுபிடி காட்டும் காவல்துறையினர் அவர்களை சென்னையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க மறுத்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த திரைப்பட இயக்குனர் சேரன் அவர்கள் தனது டுவிட்டரில் முதல்வர் மற்றும் தமிழக அரசுக்கு ஒரு ஐடியா கூறியுள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:

அய்யா.. சென்னையின் நிலை சுகாதார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கவலைக்கிடமாக மாறிக்கொண்டிருக்கிறது. நாளுக்குநாள் பயமும் கொரோனாவும் அதிகரிக்கும் நிலையில் வீட்டில் 90 நாட்களாக முடங்கி கிடப்பவர்களுக்கு நாமும் பாதிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம்..

15 நாட்களில் முடிந்துவிடும் என நினைத்து சொந்த ஊருக்கு போகாமல் தங்கியவர்கள் நிறைய. இப்போது போக நினைக்கிறார்கள். சுகாதாரமாக இருக்கும் அவர்கள் ஏதோ ஒரு காரணங்களுக்காக வெளியில் இருந்து வரும் நபர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கும் அதன்மூலம் பரவும் அபாயம் இருக்கிறது.

எனவே சென்னையில் கொரொனாவை நீங்கள் கட்டுப்படுத்த சிறந்தவழி சென்னையில் வாழும் நோய்தொற்று இல்லாதவர்களை அவரவர் ஊருக்கு பத்திரமாக சோதனை செய்து அனுப்பிவைப்பதே ஆகும்.. அப்போது சென்னையில் நோய் உள்ளவர்களை கண்டறியவும் விரைவில் சரிசெய்யவும் ஏதுவாக இருக்கும். இது என் தாழ்மையான கருத்து.

மக்களின் பொருளாதார நிலை வெற்றிடமாக மாறிய நிலையில் இங்கு யாரிடமும் கேட்க முடியாத நிலையில் அவர்களை உயிரோடு வைத்துக்கொள்ள அவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல நினைக்கிறார்கள்.. அது நியாயமும் கூட.. அதற்காக முறையே யோசித்து செயலாற்றவேண்டியது தங்களின் கடமையாகும் என நினைவூட்டுகிறேன்.

இவ்வாறு இயக்குனர் சேரன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

More News

கொரோனாவால் மரணம் அடைந்த இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு அரசு வேலை: முதல்வர் அறிவிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி

சென்னை மாம்பலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கொரோனாவால் மரணம்: அதிர்ச்சி தகவல் 

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் தற்போது முக்கிய பதவியில் உள்ளவர்களும்

சீன எல்லையில் மோதல் ஏற்படக் காரணம் என்ன??? இருதரப்புகள் கூறும் விளக்கம்!!!

கடந்த மே மாதம் 5, 6 தேதிகளில் இருந்து இந்திய எல்லைப் பகுதியான லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்து மீறுகிறது. அதற்கு எதிராக இந்தியா தனது

தமிழகத்தில் முதல்முறையாக 2000ஐ கடந்த கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு?

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தினந்தோறும் தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில்

வருகிற ஜுன் 21 அன்று உலகம் அழியப்போகிறதா??? இணையத்தில் உலவும் பரபரப்பு செய்திகள்!!!

தற்போது, நாசா விஞ்ஞானிகளே மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அளவிற்கு நமது சமூக வலைத் தளங்களில் ஒரு பரபரப்பு செய்தி உலவிக்கொண்டு இருக்கிறது.