நாமினேஷனில் லாஸ்லியாவுமா? அதிர்ச்சியில் ஆர்மியினர்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதல் யாருடைய வம்புக்கும் போகாமல் தன் அழகாலும் வசீகரத்தாலும் அனைவர் மனதையும் கவர்ந்து வந்த லாஸ்லியாவை யாருமே நாமினேஷன் செய்யவில்லை என்று கடந்த புரமோவில் பார்த்து அவரது ஆர்மியினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் சற்றுமுன் வெளியான இரண்டாவது புரமோவில் லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகிய இருவரையும் சேரன் நாமினேட் செய்துள்ளார். இரண்டு பேர்களும் எந்தவித முகமும் இல்லாமல் உள்ளனர். எனவே மற்ற முகங்கள் இடையே இந்த இருவரும் வேண்டாம் என்பது என்னுடைய கருத்து என்று நாமினேஷன் செய்ததற்கான விளக்கத்தை சேரன் தெரிவித்தார்.

அதேபோல் பாத்திமா பாபு மற்றும் சேரன் ஆகிய இருவரையும் சரவணன் நாமினேஷன் செய்தார். சேரன் தான் ஒரு இயக்குனர் என்பதை இங்கும் காட்டி வருவதாகவும், அவருடைய டாமினேஷன் பிக்பாஸ் வீட்டில் அதிகம் இருப்பதாகவும் கூறிய சரவணன், பாத்திமா பாபு அனைத்து விஷயங்களிலும் தேவையில்லாமல் தலையிடுவதால் அவரை நாமினேட் செய்வதாகவும் கூறினார். ஆக மொத்தம் இன்றைய நாமினேஷனில் இறுதியாக நாமினேட் செய்யப்படும் நால்வர் யார் யார்? என்பதை இன்றைய நிகழ்ச்சியி பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

இதுபோல் ஒரு படம் இதுவரை வந்ததில்லை, இனியும் வராது: விக்ராந்த்

ஒட்டகத்தை முக்கிய கேரக்டராக்கி உருவாக்கப்பட்டுள்ள முதல் இந்திய திரைப்படமான 'பக்ரீத்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

உலக பிரபலம் தமிழருடன் சச்சின் விரும்பி எடுத்த புகைப்படம்

இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது இந்தியர்கள் மட்டுமின்றி உலக அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின்

இணையத்தில் வைரலாகும் 'பிகில்' விஜய்யின் ஐடி கார்டு

விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் விஜய், அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்

ரித்விகா சொன்னதை தானே மதுமிதாவும் சொன்னாங்க? முன்னாள் பிக்பாஸ் பிரபலம் கேள்வி

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் சாம்பியனுமான ரித்விகா தான் ஒரு தமிழ்ப்பொண்ணு என்று கூறியபோது யாரும் கோபப்படவில்லை, மாறாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

திருமணம் எப்போது? ரசிகரின் கேள்விக்கு 'நச்சென' பதிலளித்த ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாஸன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்தார் என்பதும் அந்த காதலும் சமீபத்தில் பிரேக் அப் ஆனது என்பதும் தெரிந்ததே.