விஜய்சேதுபதிக்காக எழுதிய திரைக்கதை இதுதான்: சேரன்

  • IndiaGlitz, [Saturday,April 04 2020]

பாரதி கண்ணம்மா படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, ஆட்டோகிராப் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய நடிகரும் இயக்குனருமான சேரன், சமீபத்தில் ’திருமணம்’ என்ற படத்தை நடித்து இயக்கினார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தான் விஜய் சேதுபதிக்காக ஒரு கதை எழுதி முடித்து இருப்பதாகவும் அந்த திரைப்படத்தை விரைவில் இயக்க இருப்பதாகவும் கூறியிருந்தார்

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் இந்த படம் குறித்த எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் இருந்தது. விஜய் சேதுபதி பல படங்களில் ஒரே நேரத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் சேரனின் படம் தள்ளிப் போய்க் கொண்டிருப்பதாக கூறப்பட்டது

இந்த நிலையில் சேரனின் ’தவமாய் தவமிருந்து’ படம் குறித்து ஒரு ரசிகர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த பதிவிற்கு பதில் கூறிய இயக்குநர் சேரன் ’தனது அடுத்த படம் தவமாய் தவமிருந்து போன்ற ஒரு திரைக்கதை கொண்ட படம் என்றும் அந்த படம் அண்ணன் தங்கை குறித்த கதையம்சம் கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய்சேதுபதி அவர்களோடு இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை. ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது.. அண்ணன்களும் தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கப்போகும் படம். வழி விடுமா காலம் என்று பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவிலிருந்து விஜய்சேதுபதியை வைத்து சேரன் இயக்கும் படம் அண்ணன் தங்கை பாச கதையை கொண்ட படமாக இருக்கும் என கருதப்படுகிறது. பாசமலர், கிழக்குசீமையிலே, படங்களுக்கு அடுத்து சேரனின் இந்த படம் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் ஒரு அண்ணன் தங்கை படமாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More News

காய்கறி, மளிகை வாங்கவும் கட்டுப்பாடு: தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்

இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாத நாடுகள்!!! உலக நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை !!!

உலகத்தின் பெரும்பாலான நாடுகள் தற்போது கொரோனா பற்றிய அச்சத்தில் உறைந்து இருக்கும்போது சில நாடுகள் மட்டும் நிம்மதி பெரூமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றன.

கொரோனா விடுமுறையில் சூரி கூறிய பயனுள்ள யோசனை!

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இதுவரை சாப்பிட, தூங்க கூட நேரமில்லாமல் பிசியாக சுற்றியவர்கள் எல்லாம் கடந்த 10 நாட்களாக வீட்டை விட்டு வெளியே

இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 601 பேர்களுக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

கொரோனாவை கண்டுபிடித்த முதல் தீர்க்கதரிசி இவர்தான்: யோகிபாபு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மனித இனமே அச்சத்தில் உள்ளது. கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்துகள் மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால்