'ஆட்டோகிராப்' படத்தில் நடிக்க மறுத்த இரண்டு பிரபல நடிகர்கள்: இயக்குனர் சேரன் தகவல்

  • IndiaGlitz, [Saturday,February 22 2020]

இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய ’ஆட்டோகிராப்’ திரைப்படம் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் பார்த்த ஒவ்வொருவரும் தங்கள் இளமை காலங்களில் நடந்த காதல் அனுபவங்களை நினைத்துப் பார்க்க தவற மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் சேரன் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அதற்கு முன்னர் இரண்டு முக்கிய நடிகர்களிடம் அவர் இந்தக் கதையைச் சொன்னதாகவும் ஆனால் அவர்கள் நடிக்க மறுத்துவிட்டதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த படத்தில் நடிக்க முதலில் பிரபுதேவா ஒப்பந்தமானதாகவும், அதன் பின்னர் சம்பள விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் இந்த படத்தில் இருந்து விலகினார் என்றும் சேரன் கூறினார். அதேபோல் சியான் விக்ரமை இந்த படத்தில் நடிக்க தான் அணுகியதாகவும் ஆனால் ’ஜெமினி’ என்ற சூப்பர்ஹிட் அதிரடி ஆக்ஷன் படத்தில் நடித்து முடித்தபின் ரொமான்ஸ் படத்தில் நடிக்க அவர் விருப்பப்படவில்லை என்றும் சேரன் கூறினார். மேலும் இந்த படத்தில் நடிக்க ஒரு சில முக்கிய பிரபலங்களை அணுகியதாகவும் அனைவரும் மறுத்து விட்டதை அடுத்து தானே இந்த படத்தில் நடிக்க முடிவு செய்ததாகவும் இயக்குனர் சேரன் அந்த பேட்டியில் கூறினார் ஆட்டோகிராப் திரைப்படம் தமிழ் சினிமாவில் வெளியான மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'இந்தியன் 2' விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்திய விஷால்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் நடந்த ஒரு கோர விபத்தில் இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணா உட்பட மூவர் பலியாகினர்

சிம்புவின் 'மாநாடு' படத்தின் அடுத்தடுத்த ஷெட்யூல் குறித்த தகவல்கள்

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

ஜப்பான் கப்பலில் சிக்கிய மகள்: பிரதமருக்கு தந்தை எழுதிய உருக்கமான கடிதம்

சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி ஆயிரக்கணக்கான உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மலைகளில் 3000 டன் தங்கம் – அடித்தது லாட்டரி!!!

உத்திர பிரதேச மலைகளில் 3000 டன் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

'தலைவர் 168' படத்துடன் கனெக்சன் ஆனது 'சூரரை போற்று'

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய 'சூரரைப்போற்று' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.