ஆபர் விலையில் கோழிக்கறி!!! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 800 பேர்!!! பரபரப்பு சம்பவம்!!!

  • IndiaGlitz, [Saturday,August 01 2020]

 

மத்திய கிழக்கு நாடான ஜோர்டனில் கெட்டுப்போன இறைச்சியை உணவகம் ஒன்று சலுகை விலையில் விற்றதாகக் கூறப்படுகிறது. இதைச் சாப்பிட்ட 826 பேருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜோர்டன் தலைநகர் அம்மான் பகுதியில் உள்ள ஒரு உணவகம் வழக்கத்தை விட பாதி விலைக்கு சிக்கன் சவர்மாவை கொடுக்க சலுகைகளை அறிவித்து உள்ளது. இதனால் வழக்கத்தை விட இரண்டு மடங்கு பேர் சிக்கன் சவர்மா உணவுகளை அந்த உணவகத்தில் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதைச்சாப்பிட்ட 5 வயது சிறுவன் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்துள்ளான் என்பது அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் 826 பேர் தற்போது உடல்நலக் குறைவு காரணமாக தற்போது மருத்துவ மனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஜோர்டனில் வழக்கமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் எனக் கூறப்படுகிறது. இவ்வளவு அதிக வெப்பநிலை இருந்தும் அந்த உணவக ஊழியர்கள் சிக்கனை குளிர்சாதனப் பெட்டிகளில் பாதுகாக்காமல் விட்டு இருக்கின்றனர். அப்படியே வெளியில் வைத்து பின்பு மீண்டும் அந்த சமைத்துக் கொடுத்தால் உணவு விஷமாக மாறியிருக்கிறது என உள்ளூர் அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளனர். மேலும் அவர்கள் விற்ற சர்வமாவில் பாக்டீரியா இருந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தற்போது உறுதி செய்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக உணவக உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.