மெரீனா வன்முறைக்கு விசாரணை கமிஷன். ஓய்வுபெற்ற நீதிபதியை நியமனம் செய்த முதல்வர்

  • IndiaGlitz, [Wednesday,February 01 2017]

சென்னை மெரீனாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டத்தின் கடைசி தினத்தில் நடந்த வன்முறையால் மாணவர்கள், பொதுமக்கள் குறிப்பாக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த வன்முறையின் போது கைது செய்யப்பட்ட மாணவர்களை நேற்று விடுதலை செய்வதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சட்டமன்றத்தில் அறிவித்தார். அதுமட்டுமின்றி தவறு செய்த காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுகுறித்து விசாரணை செய்ய விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஓபிஎஸ் உறுதி அளித்தார்.

நேற்று கொடுத்த உறுதிமொழியை இன்று முதல்வர் நிறைவேற்றியுள்ளார். மெரினா சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விசாரணை கமிஷனுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும் இன்று முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

காவல்துறையினர்களின் அத்துமீறல் நடந்ததா? என்பது குறித்து இந்த விசாரணை கமிஷன் விசாரணை செய்து 3 மாதங்களில் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கமிஷன் பரிந்துரை அளிக்கும் என்று முதல்வர் தெரிவித்தார்.

More News

நேற்று பாராளுமன்றத்தில் மயங்கி விழுந்த எம்பி இன்று மரணம்

நேற்று பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருந்தபோது கேரள எம்பி அகமது என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் நாடாளுமன்றம் அருகிலுள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்...

அரவிந்தசாமியுடன் முதல்முறையாக இணையும் நந்திதா

'தனி ஒருவன்' படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டில் ரீ எண்ட்ரி ஆன அரவிந்தசாமி, ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைந்து நடித்த 'போகன்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. ...

ஜனவரியில் மிஸ் ஆன தல-தளபதி சந்திப்பு பிப்ரவரியில் நடக்குமா?

கடந்த மாதம் ஜல்லிக்கட்டுக்காக கோலிவுட் திரையுலகினர் நடத்திய மெளன உண்ணாவிரத போராட்டத்தின்போது அஜித், விஜய் சந்திப்பு நடக்கும் என்று எதிர்பர்க்கப்பட்டது. ஆனால் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத அஜித் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டாலும், விஜய் கலந்து கொள்ளாததால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை...

ஜல்லிகட்டுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு,. பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சி போராட்டம் காரணமாக தமிழக அரசு, மத்திய அரசின் வழிகாட்டுதலின்பேரில் கடந்த வாரம் அவசர சட்டம் இயற்றியது. இந்த அவசர சட்டம் சட்ட முன்வடிவாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதோடு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்...

டிரம்ப் அதிரடியால் கமல், விஜய், விக்ரம், தனுஷ் படங்களுக்கு பிரச்சனை?

அமெரிக்க அதிபராக கடந்த 20ஆம் தேதி பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் எப்போது என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை ஊகிக்க முடியாத அளவில் அவருடைய அறிவிப்புகள் அதிரடியாக உள்ளது...