திரும்பும் போது திறந்த கதவு.. காரில் இருந்து கீழே விழுந்த குழந்தை..! அதிர்ச்சி வீடியோ.

  • IndiaGlitz, [Friday,January 10 2020]

'காரில் பயணம் செய்யும்போது குழந்தைகள் மீது கவனம் இருக்க வேண்டும்’ என ஐபிஎஸ் அதிகாரியான பங்கஜ், தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். காரில் இருந்து குழந்தை ஒன்று தவறிவிழும் வீடியோ அது. இந்தச் சம்பவம் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் கேரளா சாலையில் வேகமாக பயணிக்கும் காரிலிருந்து பின்பக்க கதவு திறந்த நிலையில் திருப்பத்தின் போது குழந்தையானது கீழே விழுகிறது. பின்னால் வந்த டெம்போ வாகன ஓட்டுநர் குழந்தையை கவனித்ததால் வாகனத்தை நிறுத்திவிட்டார். எதிரில் வந்த பேருந்தும் நிறுத்தியதால் பெரிய விபத்தில்லாமல் குழந்தை காப்பற்றப்பட்டது.

''காரில் பயணிக்கும்போது குழந்தையின் இருக்கைகள் மற்றும் காரின் லாக்குகள் மீது கவனம் இருக்க வேண்டும். எல்லா கதவுகளும் மூடப்பட்டிருக்கிறதா என்று சோதிக்க வேண்டும். எல்லா குழந்தைகளும் இதைப்போல் அதிர்ஷ்டசாலியாக இருக்க மாட்டார்கள்” என பங்கஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கேரள வனப்பகுதியில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஜீப்பில் பயணம் செய்யும்போது குழந்தை ஒன்று தவறி விழுந்தது. குழந்தை விழுந்ததுகூட தெரியாமல் அந்த வாகனம் சென்றுவிட்டது. வனப்பகுதிக்கு அருகில் சுங்கச்சாவடி இருந்ததால் அங்கிருந்த ஊழியர்கள் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தை சிறிய காயங்களுடன் உயிர் தப்பியது.

More News

இன்று மாலை 6 மணிக்கு அனிருத் வெளியிடவுள்ள ரகசியம்!

பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல்', 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் கசட தபற', 'தாராள பிரபு'

'பட்டாஸ்' ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்!

இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' மற்றும் தனுஷ் நடித்த 'பட்டாஸ்' ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பது ஏற்கனவே தெரிந்ததே

மகள்களை காப்பாற்ற கொள்ளையர்களாக மாறும் தந்தைகள்..!

அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவில் தன் குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறி ஒருவர் மருந்தகத்தில் பணம் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்ட அரசு பள்ளியில் தொடங்கப்பட்ட ரோபாட்டிக் ஆய்வகம்..! தமிழகத்திலேயே முதல்முறை.

பள்ளியின் முன்னாள் மாணவரான ஸ்டீபன் ஜெயராஜ் என்பவர் இந்தப் பள்ளிக்காக ரோபோட்டிக் ஆய்வகம் அமைத்துத் தந்திருக்கிறார்.

2020 – சனிப்பெயர்ச்சி : சனி பகவான் யாருக்கு அள்ளிக் கொடுக்கப் போகிறார்? யார் வாழ்க்கையைக் கெடுக்க போகிறார்?

திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி, விகாரி வருடம், தை மாதம் 10 ஆம் தேதி அதாவது 24 – ஜனவரி 2020 இல் சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்கிறார்