தாய் இறந்தது கூட தெரியாமல் எழுப்பும் பச்சிளங்குழந்தை: வைரலாகும் வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,May 27 2020]

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து மாநிலம் விட்டு மாநிலத்திற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் நடந்தே சென்றனர். இவர்களில் சிலர் செல்லும் வழியிலேயே பசி மயக்கம் உள்பட பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர் என்பது கொடுமையான நிகழ்வாகும்

இந்த நிலையில் குஜராத்திலிருந்து பீகார் மாநிலம் முசாபூருக்கு தனது 2 வயது குழந்தையுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு பெண் ரயிலில் புறப்பட்டுள்ளார். அவர் சென்ற ரயில் முசாபூர் ரயில் நிலையத்தை அடையும் முன்னரே அந்த பெண்ணின் உயிர் பிரிந்துவிட்டது. பசி மற்றும் வெப்பம் தாங்காமல் அந்த பெண் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டது

இதனை அடுத்து முசாபர் ரயில் நிலையத்தில் அந்த பெண்ணின் உடல் போர்வையால் மூடப்பட்டு ஆம்புலன்ஸ் வரும் வரை வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தாய் இறந்தது கூட தெரியாமல் அவருடைய பச்சிளம் குழந்தையை அவர் மேல் மூடப்பட்டிருந்த போர்வையை எடுத்து அவரை எழுப்ப முயற்சித்த பரிதாபமான காட்சி அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தாய் இறந்தது கூட தெரியாமல் அவருடன் விளையாடிக்கொண்டும் எழுப்ப முயன்று கொண்டும் இருந்த அந்த குழந்தையின் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

More News

கொரோனாவிற்கு அமெரிக்க அதிபர் அளித்த நன்கொடை எவ்வளவு தெரியுமா???

அமெரிக்காவில் கொரோனா பரவல் தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா சிகிச்சையில் ஹைட்ராக்ஸிகுளோகுயினுக்குத் தடை விதித்த நாடுகள்!!!

நேற்று WHO வெளியிட்ட அறிக்கையில் மலேரியாவிற்கு மட்டுமே ஹைட்ராக்ஸிகுளோகுயின் மருந்து நல்ல பலனைத் தருவதாகவும்

18 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: இன்றைய தமிழக கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் வெளியான இன்றைய பாதிப்பு குறித்த தகவல்

சாம்பியன் ஆஃப் சாம்பியனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய குஷ்பு!

முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருமான ரவிசாஸ்திரி இன்று தனது 58வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இந்திய எல்லையில் நிலவும் பதற்றம்!!! தற்போதைய நிலைமை என்ன???

இந்தியாவின் எல்லைப் பகுதியில் சீனா இராணுவ வீரர்களை குவித்து வருகிறது. கிட்டத்தட்ட 5 ஆயிரம் இராணுவ வீரர்கள் குவிக்கப் பட்டு இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.