விஜய்யின் தவெகவில் குழந்தைகள் அணி.. மொத்தம் எத்தனை அணிகள்? முழு பட்டியல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றி கழகத்தின் கீழ் சில அணிகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் சில அணிகள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் ஒன்று குழந்தைகள் அணி என்று அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநங்கைகள், காலநிலை மாற்றம், தகவல் சரிபார்ப்பு, இளைஞர் அணி ஆகிய அணிகளுடன் குழந்தைகள் அணியும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மொத்த அணிகள் தற்போது 28 என்று உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அந்த அணிகளின் முழு விவரங்கள் இதோ:
தமிழக வெற்றிக் கழக அணிகளின் பட்டியல்:
1. தகவல் தொழில்நுட்ப பிரிவு
2. வழக்கறிஞர் பிரிவு
3. மீடியா பிரிவு
4. பிரச்சாரம் மற்றும் பேச்சாளர்கள் பிரிவு
5. பயிற்சி மற்றும் தொண்டர் மேம்பாட்டு பிரிவு
6. உறுப்பினர் சேர்க்கை பிரிவு
7. காலநிலை ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பிரிவு
8. வரலாற்று தரவு ஆராய்ச்சி & உண்மைச் சரிபார்ப்பு பிரிவு
9. திருநங்கைகள் பிரிவு
10. மாற்றுத்திறனாளிகள் பிரிவு
11. இளைஞர்கள் பிரிவு
12. மாணவர்கள் பிரிவு
13. பெண்கள் பிரிவு
14 இளம் பெண்கள் பிரிவு
15. குழந்தைகள் பிரிவு
16. தொண்டர்கள் பிரிவு
17 வர்த்தகர் பிரிவு
18 மீனவர் பிரிவு
19: நெசவாளர் பிரிவு
20. ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவு
21 தொழிலாளர் பிரிவு
22 தொழில்முனைவோர் பிரிவு
23. அயல்நாட்டில் வசிப்பவர் பிரிவு
24 மருத்துவர்கள் பிரிவு
25 விவசாயிகள் பிரிவு
26. கலை. கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பிரிவு
27. தன்னார்வலர்கள் பிரிவு
28. அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் ",
“தவெகவில் 28 அணிகள்”
— தமிழக வெற்றிக் கழகம் (செய்திகள்) (@TVK_CbeNorth) February 11, 2025
தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள 28 அணிகள் குறித்த பட்டியல் வெளியீடு;
மூன்றாம் பாலினத்தவர், காலநிலை மாற்றம், தகவல் சரிபார்ப்பு, இளைஞர் அணி, குழந்தைகள் அணி உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன pic.twitter.com/TjFvbE9lVw
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com