close
Choose your channels

கனமழையால் கதிகலங்கும் சீனா… அணை உடையும் அபாயம் இருப்பதாக பகீர் தகவல்!

Thursday, July 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீனாவின் ஹெனான் மகாணத்தில் கடந்த ஒருசில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. கடந்த 1,000 வருடங்களில் இல்லாத அளவிற்கு அந்த மாகாணத்தில் தற்போது கனமழை பெய்து வருவதாகக் கூறப்படும் நிலையில் யிஹெடான் எனும் அணை எந்நேரமும் உடையலாம் என அந்நாட்டு ராணுவம் எச்சரித்துள்ளது.

ஹெனான் மகாணத்தில் கடந்த 20 ஆம் தேதி ஆரம்பித்த கனமழை ஒரு மணி நேரத்தில் 209 மிமீ மழையைக் கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் அங்குள்ள பள்ளமான பகுதிகள் முழுவதும் வெள்ளக் காடாக மாறியது. அப்படி சுரங்க ரயில் பாதைக்குள் நுழைந்த வெள்ளமானது ஒரு ரயில் பாதையை முழுவதும் அடைத்துக்கொண்டு நிறுத்தியது. மேலும் அந்த ரயிலுக்குள் பாயத் துவங்கிய கனமழை அங்கிருந்த பயணிகளின் கழுத்துவரை எகிறியது.

இதனால் பலமணி நேரம் கழுத்துவரை உள்ள நீரில் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் அவதியுற்றனர். இந்த விபத்தில் சிக்கியவர்களை அந்நாட்டு மீட்புப்படை கடும் பேராட்டத்திற்கு இடையே மீட்டது. ஆனாலும் அந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் ஹெனான் மகாணத்தில் உள்ள ஸெங்கோ எனும் பகுதியில் கடந்த 3 தினங்களாக கனமழை தொடர்ந்து பெய்து  வருகிறது. சனிக்கிழமை மட்டும் இந்நகரில் 617 மிமீ மழை பெய்ததாகவும், இந்த நகரில் ஒரு ஆண்டு முழுவதும் பெய்யும் 640மிமீ அளவை நெருங்கி விட்டதகாவும் கூறப்படுகிறது. இதனால் ஸெங்கோ நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறி சாலையில் ஆறுபோல தண்ணீர் பாய்ந்து வருகிறது.

 மேலும் சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு வருகின்றன. இந்த வெள்ளப் பெருக்கினால் மஞ்சள் நதி, ஹைஹே நதிகள் முழுவதும் நிறைந்து அபாய அளவை எட்டியுள்ளது. இதனால் யிஹெடான் அணை எந்நேரமும் உடையலாம் என ராணுவம் எச்சரித்துள்ளது.

சீனாவில் பெய்துவரும் வரலாறு காணாத மழையினால் பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் அணை உடையும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு இராணுவம் எச்சரித்து இருப்பதும் கடும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவைப்போல ஜெர்மனியிலும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இந்தக் கனமழையில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

மழை சீற்றத்தைத் தவிர அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளில் உள்ள பல மாகாணங்களில் தற்போது கடும் வெப்பம் வீசி வருகிறது. இந்தச் சீற்றத்தினால் பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.