close
Choose your channels

ஒரே நாளில் 10 மாடிக் கட்டிடம் ரெடி… அசர வைக்கும் மேக்கிங் வீடியோ!

Monday, June 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

“வீட்டைக் கட்டிப்பாரு கல்யாணத்தைப் பண்ணிப்பாரு“ எனச் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நாம் இன்னும் பழைய தொழில் நுட்பத்திலேயே காலத்தை தள்ளி வருகிறோம். இந்நிலையில் சீனாவில் உள்ள ஒரு நிறுவனம் வெறும் 28 மணி நேரத்தில் படு அசத்தலான 10 மாடி குடியிருப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இந்த குடியிருப்பில் அனைத்து வசதிகளும் பொருத்தப்பட்டு உள்ளன.

ப்ராட் குரூப் எனும் நிறுவனம்தான் தற்போது 28 மணிநேரத்தில் 10 மாடி குடியிருப்பை உருவாக்கி இருக்கிறது. இதற்காக கப்பலில் வைக்கப்படும் கன்டெய்னர் அளவிலான அறைகளை அந்நிறுவனம் ஏற்கனவே உருவாக்கி வைத்துவிட்டது. இந்த அறைகளில் அனைத்து வசதிகளும் ஏற்கனவே உருவாக்கப்பட்டு இருந்தன. இப்படி உருவாக்கப்பட்ட ஒவ்வொரு அறைகளையும் குறிப்பிட்ட நாளில் லாரிகளில் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டது.

Prefabricated construction system புதிய முறையைப் பயன்படுத்தி இந்தக் கட்டிடம் உருவாக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த கட்டிடம் உருவாக்கப்பட்ட முறை குறித்தும் ப்ராட் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.