close
Choose your channels

சீனாவுக்கு இதெல்லாம் முன்னாடியே தெரியும்… திடுக்கிடும் அறிவிப்பை வெளியிட்ட பெண் விஞ்ஞானி!!!

Monday, July 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீனாவுக்கு இதெல்லாம் முன்னாடியே தெரியும்… திடுக்கிடும் அறிவிப்பை வெளியிட்ட பெண் விஞ்ஞானி!!!

 

ஹாங்காங் வைரலாஜி துறையில் பணியாற்றும் நோய் எதிர்ப்பு மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் லி மெ யான் தற்போது உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார். அமெரிக்காவின் பாக்ஸ் ஆஃபிஸ் செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்து உள்ள பேட்டியில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து சீனாவிற்கு முன்பே தெரியும், அதோடு மனிதர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் தவகலை அவர்கள் முன்பே அறிந்து வைத்து இருந்தார்கள் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் சீனா தவறிழைத்து விட்டது, உலக நாடுகளுக்கும், உலகச் சுகாதார அமைப்பிற்கும் உரிய நேரத்தில் தகவல்களை தெரிவிக்க வில்லை என்ற குற்றச்சாட்டை உலகத்தின் முக்கால்வாசி நாடுகள் தெரிவித்து இருக்கின்றன. இதுகுறித்த விசாரணைக்கு ஒப்புதல் வழங்குமாறு உலகச் சுகாதார மையத்தை ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட நாடுகள் கேட்டுக்கொண்டதன் பேரில் தற்போது WHO விஞ்ஞானிகள் சீனாவில் ஆய்வைத் தொடங்கியிருக்கின்றனர். இந்த விவகாரத்தில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உலக யுத்தமே நடைபெறும் அளவிற்கு கடுமையான அரசியல், பொருளியல் முரண்பாடுகள் வெடித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் தவித்து வருகின்றன. இந்நேரத்தில் சீனா கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை உரிய நேரத்தில் வெளியிட வில்லை என்ற குற்றச்சாட்டை சீனாவைச் சார்ந்த ஒரு விஞ்ஞானியே தெரிவித்து இருக்கிறார் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ஹாங்காங்கில் உள்ள அவருடைய நிறுவனமும் உலகச் சுகாதார அமைப்பின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. கொரோனா விஷயத்தில் எந்த கருத்துகளையும் வெளிப்படுத்த வேண்டாம் என்று தன்னிடம் நிறுவன அதிகாரிகள் கேட்டுக்கொண்டதாகவும் டாக்டர் லி மெங் யான் தெரிவித்து இருக்கிறார்.

சீன அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் பரவல் பற்றிய தகவல் அனைத்தும் முன்பே தெரியும் ஆனால் அதை காலம் தாழ்த்தியே வெளிப்படுத்தினார்கள் என்ற கருத்தை பல உலகத் தலைவர்கள் முதற்கொண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளும் தெரிவித்து இருந்தனர். அந்த வரிசையில் தற்போது ஹாங்காங் பெண் விஞ்ஞானி லி மெங் யானும் சேர்ந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய நிறுவன அதிகாரிகள் கொரோனா வைரஸ் தகவல்களை வெளி உலகத்திற்கு சொல்லக்கூடாது எனக் கேட்டுக் கொண்டதால் அவர் ஏப்ரல் 28 ஆம் தேதி அமெரிக்காவிற்கு தஞ்சம் அடைந்ததாகவும் கூறியுள்ளார்.

ஒருவேளை தொடர்ந்து ஹாங்காங்கில் இருந்தால் என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் நேர்ந்து இருக்கலாம் அல்லது மற்ற விஞ்ஞானிகளைப் போல நான் காணாமல் போயிருக்கலாம். அதனால்தான் அமெரிக்காவிற்கு வந்ததாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். ஜனவரி 10 ஆம் தேதி வாக்கில் முதன்முதலாக ஆஸதிரேலிய ஊடகம் ஒன்றில் கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கு பரவும் என்ற தகவல் வெளியானது. ஆனால் டாக்டர் லி மெங் யானின் தோழி கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியே இந்த கருத்தை உறுதிப்படுத்தும் ஆய்வுகளை செய்து முடித்து இருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக நாடுகளிடையே கடும் விவாதங்கள் வைக்கப் பட்டு வருகின்றன. இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது உலகச் சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் சீனாவில் ஆய்வை மேற்கொண்டு வருகின்றன. அந்த ஆய்வில் முடிவான தரவுகள் கிடைக்கும் பட்சத்தில் எப்போது கொரோனா வைரஸ் பரவியது, எங்கிருந்து பரவியது என்பது போன்ற முழுமையானத தகவல்கள் வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பும் தற்போது அதிகமாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.