செயற்கையாக ஒரு சூரியனையே உருவாக்கிக் கொண்டிருக்கும் சீனா..!

  • IndiaGlitz, [Friday,December 27 2019]

நாம் இப்போது அணு உலைகளில் 'அணுக்கரு பிளவு' என்னும் முறையைத்தான் பயன்படுத்தி வருகிறோம். இந்த முறையில் யுரேனியம் அல்லது புளூட்டோனியத்தை சிறு சிறு அணுக்களாகப் பிரிப்பார்கள். அப்படிப் பிரிக்கும்போது அதிக அளவிலான ஆற்றல் வெளிப்படும். அந்த ஆற்றலைப் பயன்படுத்திதான் அணு உலைகளில் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இந்த செயல்முறையின்போது அதிக அளவிலான கதிர் வீச்சும் வெளிப்படும்.

இதற்கு நேர் எதிர் செயல்முறைதான் 'அணுக்கரு இணைவு.' இதன் செயல்முறையில் இரு சிறு அணுக்கள் ஒரே அணுவாக இணைக்கப்படும். இந்த முறையில் இரு நன்மைகள் உண்டு. ஒன்று இதிலிருந்து வெளிப்படும் ஆற்றலானது அணுக்கரு பிளவின்போது வெளிப்படும் ஆற்றலைவிட 100 மடங்கு அதிகமாக இருக்கும். இந்த முறையில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அணுக் கதிர்வீச்சு எதுவும் வெளிப்படாது. சுலபமாகச் சொல்ல வேண்டும் என்றால் நம்முடைய சூரியன் இயங்குவது இந்த முறையில்தான்.

''HL-2M Tokomak எனப் பெயரிடப்பட்டுள்ள செயற்கை சூரியனைத் தயாரிக்கும் பணி இந்த ஆண்டு இறுதியில் முடிந்துவிடும் என அறிவித்திருந்தது சீனாவின் National Nuclear Corporation. சமீபத்தில் அந்தக் கருவியை வடிவமைப்பதில் பங்கு பெற்றிருக்கும் விஞ்ஞானி துவான் சுரு அந்நாட்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ''கருவியில் Coil system பொருத்தும் பணி நிறைவு பெற்றிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். அதன்படி சீனாவின் இந்தத் திட்டம் 2020-ல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அந்தக் கருவியைப் பற்றி அவர் கூறும்போது, ''இந்தக் கருவியின் மூலம் 200 மில்லியன் டிகிரி செல்சியஸ் அளவு வெப்பத்துடன் ப்ளாஸ்மாவை உற்பத்தி செய்ய முடியும். அதற்கு 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் அளவு எரிபொருளை உள்ளீடு செய்ய வேண்டியிருக்கும் என்றார்.

இன்னும் அந்தச் சாதனத்தைப் பற்றிய தகவல்கள் பெரிதாக வெளிவரவில்லை. சீனாவின் இந்தச் சாதனம் வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எப்படி இருப்பினும் அறிவியலின் அடுத்தகட்டத்துக்கு இந்தத் திட்டம் ஒரு படியாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

More News

ரஜினியின் 'தர்பார்' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தர்பார்' திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும்

2019-ஆம் ஆண்டின் மோசமான பாஸ்வேர்ட்கள். உங்களோடது லிஸ்ட்ல இருக்கானு பார்த்துக்கோங்க மக்களே..!

சர்வதேச அளவில் 2019ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட எளிதாக கணிக்கக்கூடிய 10 பாஸ்வோர்ட்களின் பட்டியலை, worst passwords of 2019 என்ற பெயரில் Splash Data நிறுவனம் வெளியிட்டுள்ளது.

11ஆம் வகுப்பு மாணவியை வெவ்வேறு ஊருக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்!

நாமக்கல்லில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி அதன் பின்னர் அவரை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்

இனி நீங்க என்ன பாக்கணும்னு நாங்க முடிவு பண்ணுவோம், வருகிறது ரஷ்யாவிற்கு மட்டும் தனி இன்டர்நெட்..! #Runet

ரஷ்யா தனது நாட்டிற்கு மட்டுமான சொந்தமாக ஓர் இணையத்தை (Internet) உருவாக்கி வந்ததாகத் தகவல் பரவி வந்த நிலையில், தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டை எழுதும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம்

இன்னும் ஒரு சில நாட்களில் 2019ஆம் ஆண்டு நம்மிடமிருந்து விடைபெற்று 2020ஆம் ஆண்டு என்ற புத்தாண்டு பிறக்க உள்ளது. புதிய ஆண்டு பிறந்த உடன் பலருக்கும் ஏற்படும் ஒரு பிரச்சனை