புதிய திரைப்படத்திற்கு டைட்டில் வைத்த வைரமுத்து: சின்மயி, கங்கை அமரனின் ரியாக்சன்!

நடிகர் பாபி சிம்ஹா நடிக்கவிருக்கும் படத்திற்கு டைட்டில் வைத்த வைரமுத்துவிற்கு கங்கை அமரன் மற்றும் சின்மயி காட்டிய ரியாக்சன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கவிப்பேரரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் ’பாபி சிம்ஹா நடிக்கும் புதிய படத்திற்கு ’தடை உடை’ என்று பெயர் வைத்தேன் என்றும் படப்பிடிப்பையும் தொடங்கி வைத்தேன் என்றும் இந்த படத்தில் பணிபுரியும் கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மாலை சூட்டி மகிழ்ந்தார்கள் என்றும், கொண்டாட்டங்களே வாழ்க்கை’ என்றும் பதிவு செய்திருந்தார் .

இந்த பதிவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த பதிவு குறித்து இசையமைப்பாளர் கங்கை அமரன் தனது சமூக வலைத்தளத்தில் ’கங்கைக் கரைத் தோட்டம், கன்னிப் பெண்கள் கூட்டம், கண்ணன் நடுவினிலே’ என்று பதிவு செய்திருந்தார்.

அவர் எந்த அர்த்தத்தில் இந்த பதிவை செய்திருந்தார் என்பதை புரிந்து கொண்ட நெட்டிசன்கள் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இதேபோல் இந்த பதிவை பாடகி சின்மயியும் ரீட்வீட் செய்து இருந்தார். வைரமுத்துவின் பதிவிற்கு ரியாக்சன் காட்டிய சின்மயி மற்றும் கங்கை அமரன் ஆகிய இருவருக்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

More News

பொன்னியின் செல்வன்' பின்னணி இசை: வைரலாகும் மாஸ் வீடியோ

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து முழுவீச்சில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்

உலக சாதனை படைக்க இருக்கும் படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற கலைப்புலி எஸ்.தாணு!

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற உலக சாதனையை பெற இருக்கும் திரைப்படத்தின் உலகளாவிய ரிலீஸ் உரிமையை கலைப்புலி எஸ் தாணு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

படப்பிடிப்பின்போது மகேஷ்பாபுவை அடித்த கீர்த்தி சுரேஷ்: அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

படப்பிடிப்பின்போது மகேஷ்பாபுவை தெரியாமல் கீர்த்தி சுரேஷ் அடித்து விட்டதாகவும் அதன் பிறகு அவர் மன்னிப்பு கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

ஹிந்தி பேசுபவர்கள் நல்லவர்கள், ஹிந்தியை கற்று கொள்ளுங்கள்: சுஹாசினி மணிரத்னம்

ஹிந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்றும், ஹிந்தி நல்ல மொழி என்றும் அனைவரும் ஹிந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சுஹாசினி மணிரத்தினம் நகை கடை நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

துபாய் சாலையில் மகளுடன் நடனம் ஆடிய 'பட்டுக்குட்டி': வைரல் வீடியோ

துபாயில் உள்ள சாலையில் மகளுடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 'பட்டுக்குட்டி' என்று செல்லமாக பரத்தால் அழைக்கப்படும் வெங்கடேஷ் பட் நடனம் ஆடிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது