close
Choose your channels

தாலி அணிவதும் அணியாததும் என் விருப்பம்: சின்மயி அதிரடி

Tuesday, February 18, 2020 • தமிழ் Comments

பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் மகள் கதிஜா புர்கா அணிந்து இருப்பது குறித்து முன்னணி எழுத்தாளர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததற்கு கதீஜா தனது சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுத்திருந்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் கதீஜாவுக்கு ஆதரவாக பல திரையுலக பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாடகி சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறிய பொழுது ’மிகவும் சிறிய உடைகளை அணியும் பெண்களை கண்டித்து அசிங்கப்படுத்துவது போல் தான் புர்கா அணியும் பெண்களை விமர்சனம் செய்வது என்றும் புர்கா அணிவதும் அணியாததும் கதீஜாவின் சொந்த விருப்பம் என்று கூறியுள்ளார்.

சின்மயி இந்த கருத்துக்கு டுவிட்டர் பயனாளி ஒருவர், ‘தாலி குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கேள்வி கேட்டார். அதற்கு சின்மயி ’தாலி அணிய சொல்லி எனது கணவரோ அல்லது எனது கணவரின் பெற்றோர்களோ கட்டாயப்படுத்தவில்லை. நானே விருப்பப்பட்டு தான் தாலி அணிகிறேன். தாலி அணிவதும் அணியாமல் இருப்பதும் என்னுடைய சாய்ஸ்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்

டுவிட்டர் பயனாளியின் தாலி குறித்த கேள்வியும் அதற்கு சின்மயி அளித்துள்ள பதிலும் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Get Breaking News Alerts From IndiaGlitz