நான் கர்ப்பமானதை சொல்லாததற்கு இந்த சாக்கடை குப்பைகள் தான் காரணம்: சின்மயி

பாடகி சின்மயி சமீபத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில் அவர் கர்ப்பமாக இருந்ததே தெரியாத ரசிகர்கள் திடீரென அவருக்கு குழந்தை பிறந்தது என்ற செய்தியை கேள்விப்பட்டு ஆச்சர்யப்பட்டு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதை சொல்லாததற்கு இதுதான் காரணம் என தனது டுவிட்டர் பக்கத்தில் சின்மயில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாடகி சின்மயிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன என்ற செய்தி வெளியானதும் அவருக்கு ஏராளமான நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். ஆனால் ஒரு சிலர் அவரை கேலியும் கிண்டலும் செய்த நிகழ்வுகளும் நடந்தது. குறிப்பாக ஒரு நெட்டிசன் உங்கள் இரண்டு குழந்தைகளையும் வைரம், முத்து போல் கவனமாக பார்த்து கொள்ளுங்கள் என்று தெரிவித்திருந்தார். இதற்கு சின்மயி அந்த நபருக்கு பதிலடி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பல நெட்டிசன்கள் தனது குழந்தைகள் குறித்தும் தன்னை பற்றியும் கேலியும் கிண்டலும் செய்து வருவதை அடுத்து அவர் காட்டமாக ஒரு பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், ‘நான் குழந்தை பிறந்ததை அறிவித்தவுடன் பல நெட்டிசன்கள் நான் மீடுவில் குறிப்பிட்டிருந்த நபருடன் என்னுடைய குழந்தைகளை ஒப்பிட்டு பேசி வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும்தான் பெண்ணியம் பற்றி பேசும் மாநிலம், ஆனால் அதே நேரத்தில் சமூக வலைதளத்தில் அதிக சாக்கடை குப்பைகள் இருக்கும் மாநிலமும் தமிழகம் தான். அதனால் தான் கர்ப்பமாக இருந்ததை பற்றி சமூக வலைத்தளத்தில் பேசவே இல்லை என்று கூறினார். அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

லைகா நிறுவனத்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் தயாரித்த 'டான்'  திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நூறு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

விஜய்க்கு அனுப்பிய கடைசி மெசேஜ் இதுதான்: 'மாஸ்டர்' நாயகி மாளவிகா மோகனன்!

தளபதி விஜய் நடித்த மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான 'மாஸ்டர்' படத்தில் அவருடன் நடித்த நடிகை மாளவிகா மோகனன், தான் விஜய்க்கு அனுப்பிய கடைசி மெசேஜ் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

திரெளபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள், கெளரவர்கள் யார்: பிரபல இயக்குனரின் சர்ச்சை கேள்வி

திரெளபதி ஜனாதிபதியானால் பாண்டவர்கள் மற்றும் கெளரவர்கள் யார் என பிரபல இயக்குனர் சர்ச்சைக்குரிய கேள்வி ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் எழுப்பியுள்ள நிலையில்

விஜய்யின் 'வாரிசு' படம் காப்பியா? பிரபல நிறுவனம் விளக்கம்!

தளபதி விஜய்யின் 'வாரிசு'  திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் புகைப்படங்கள் சமீபத்தில் அவருடைய பிறந்த நாள் விருந்தாக வெளியாகின என்பதும் இந்த படத்தின் மூன்று புகைப்படங்கள் மிகப்பெரிய

'முக்கா துட்டு கப்பகிழங்கே, அக்கா பெத்த  அச்சு முறுக்கே': 'திருச்சிற்றம்பலம்' சிங்கிள் பாடல்

 தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன்