வைரமுத்து பெரிய மனிதாரா? திலகவதி ஐபிஎஸ் ஆவேசம்

  • IndiaGlitz, [Monday,October 15 2018]

வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய சின்மயி விரைவில் இதுகுறித்து புகார் அளிக்க வேண்டும் என்றும் வைரமுத்துவை விரைவில் விசாரணை செய்ய வேண்டும் என்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை. அவர் ஏதாவது கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருக்கிறாரா? அல்லது பொறுப்பில் இருக்கிறாரா? இல்லையே. பணத்துக்காக பாடல் எழுதுபவர் தானே? பிறகு ஏன் அவரை விசாரிக்கக் கூடாது?

தன் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்கு காலம் தான் பதில் சொல்லும் என்று வைரமுத்து கூறுகின்றார். சின்மயிக்கு பாலியல் துன்புறுத்தலுக்கு காலமா காரணமா? வைரமுத்து தன்னை ஒரு பெரிய மனிதர் என்று சொல்லிக்கொள்கிறார். அதை நாங்கள் தான் சொல்லவேண்டும். பிரபலமானவர்கள் எல்லாம் பெரிய மனிதர்கள் கிடையாது. அழகாக பேசினாலே அதற்கு மயங்கக் கூடியவர்கள் தமிழர்கள். அதுபோன்ற போக்கு தான் இது.

சின்மயி வி‌ஷயத்தில் அரசியல் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. சின்மயி ஏன் காவல்துறைக்கு செல்ல தாமதிக்கிறார் என்றும் தெரியவில்லை. சின்மயி வி‌ஷயத்தில் யாராவது ஒரு நீதிபதி தானே முன்வந்து கையில் எடுத்து விசாரிக்க வேண்டும். சின்மயி தாமதமாக புகார் சொல்வதை குறை சொல்ல முடியாது. சம்பவம் நடந்தபோது அவருக்கு 17, 18 வயது தான். அந்த சூழலில் அவர் குழப்ப நிலைக்கு தான் சென்றிருப்பார். இப்போது அவருக்கு வயது காரணமாக பக்குவம் வந்திருக்கலாம்.

இவ்வாறு திலகவதி ஐபிஎஸ் கூறியுள்ளார்.

More News

கமல்ஹாசன் மாய உலகில் இருக்கிறார்: தமிழிசை செளந்திரராஜன்

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு ஆளுமை நிறைந்த தலைவர்கள் மறைந்த நிலையில் மிக எளிதில் முதல்வர் பதவியை பிடித்துவிடலாம்

'சர்கார்' படத்திற்கு மீண்டும் புரமோஷன் செய்யும் தமிழிசை?

'சர்கார்' படத்தின் டைட்டில் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தனது கமெண்ட்டை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

படப்பிடிப்பின்போது பாலியல் தொல்லை: நடிகர் சண்முகராஜன் மீது பிரபல நடிகை புகார்

கடந்த சில மாதங்களாக நடிகைகள் உள்பட திரையுலகினர் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை தைரியமாக வெளியே கூறி வருகின்றனர்.

'தேவர் மகன் 2' சாதியை எதிர்க்கும் படமா? கமல் பதில்

'தேவர்மகன்2' அனைத்து சாதியினருக்கும் எதிரான படம்”என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சபரிமலைக்கு பெண்கள் சென்றால் கூட்டுத்தற்கொலை: சிவசேனா மிரட்டல்

சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று ஐயப்பனை வழிபடலாம் என சுப்ரீம் கோர்ட் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியது.