ராதாரவியுடன் நேருக்கு நேர் மோத முடிவு செய்த சின்மயி! பெரும் பரபரப்பு

டப்பிங் யூனியன் சங்கத்தின் தேர்தல் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் மீண்டும் நடிகர் ராதாரவி தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார். இந்த நிலையில் அவரை எதிர்த்து திடீரென பாடகி சின்மயி தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டப்பிங் யூனியன் சங்கத்திலிருந்து சமீபத்தில் சின்மயி நீக்கப்பட்டார் என்பதும் அதற்கு ராதாரவி தான் காரணம் என்றும் சின்மயி குற்றஞ்சாட்டினார் என்பதும் தெரிந்ததே. அதன்பின்னர் தன்னை நீக்கியது செல்லாது என அறிவிக்க கோரி சின்மயி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சின்மயிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது

இந்த நிலையில் தற்போது ராதாரவியை எதிர்த்து சின்மயி நேருக்கு நேராக தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார். இருப்பினும் டப்பிங் யூனியன் வாக்காளர் பட்டியலில் சின்மயி பெயர் இல்லை என்றும் அதனால் அவரது வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது ஒரு வேளை தன்னுடைய வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் நீதிமன்றம் செல்ல இருப்பதாக சின்மயி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

பிரபல தமிழ் குணசித்திர நடிகர் காலமானார்!

வைதேகி காத்திருந்தாள், சிந்துபைரவி, விக்ரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் டிஎஸ் ராகவேந்திரா இன்று காலமானார்

சென்னையில் சுயாதீனத்  திரைப்பட விழா

சென்னையில் தமிழ் ஸ்டூடியோ என்ற ஒரு அமைப்பு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் சுயாதீனத் திரைப்பட விழாவினை நடத்திவருகிறது.

'மேன் வெர்சஸ் வைல்ட்' அடுத்த பாகத்தில் ரஜினி பட வில்லன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் டிஸ்கவரி சேனல் தயாரித்த 'மேன் வெர்சஸ் வைல்ட்' என்ற ஆவணப் படத்தில் நடித்தார் என்பது தெரிந்ததே.

சென்னையில் நிர்வாணமாக நடந்து சென்ற 20 வயது பெண்: பெரும் பரபரப்பு

சென்னையின் பிசியான சாலைகளில் ஒன்றாகிய ராயப்பேட்டை சாலையில் 20 வயது பெண் ஒருவர் திடீரென உடை ஏதும் இன்றி நிர்வாணமாக

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் இணைந்த ரஜினி பட நாயகி!

'பாகுபலி', 'பாகுபலி 2' ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கும் அடுத்த திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'.