ஒரு வருடத்திற்கு பின் சிவகார்த்திகேயன் படத்தில் ரீஎண்ட்ரி ஆகும் சின்மயி

  • IndiaGlitz, [Saturday,December 14 2019]

பிரபல பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி கடந்த ஆண்டு டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டார். டப்பிங் யூனியன் தலைவரான ராதாரவியின் இந்த நடவடிக்கையை அடுத்து சின்மயி நீதிமன்றம் சென்று மீண்டும் டப்பிங் யூனியனில் சமீபத்தில் இணைந்தார். இந்தப் பிரச்சினை காரணமாக கடந்த ஒரு வருடமாக எந்த தமிழ் படத்திற்கும் அவர் டப்பிங் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்புக்கு பின் அதாவது ஒரு வருடத்துக்குப் பின் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’ஹீரோ’ படத்தின் நாயகி கல்யாணி பிரியதர்ஷனுகாக சின்மயி டப்பிங் செய்துள்ளார். இதற்காக அவர் இயக்குனர் பிஎஸ் மித்ரன் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி கூறியுள்ளார்

இதுகுறித்து சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘டப்பிங் யூனியனில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஒரு வருடத்துக்கு மேல் தான் தமிழ் படங்களுக்கு டப்பிங் செய்யாமல் இருந்ததாகவும், தற்போது தனக்கு வாய்ப்பு அளித்த மித்ரன் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி கூறுவதாகவும் அவர் தெரிவித்தார் மித்ரன் மற்றும் தயாரிப்பாளர் தனக்கு உண்மையான ஹீரோவாக தெரிவதாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்

More News

அன்புள்ள கில்லி'க்கு வாய்ஸ் கொடுத்த அருண்ராஜா காமராஜ்

இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் என்பவர் இயக்கி வரும் 'அன்புள்ள கில்லி' என்ற படத்திற்கு ஒரு பாடலை பாடியுள்ளார் பிரபல பாடகரும் இயக்குனரும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ்.

நண்பராக இருக்காவிட்டாலும் நல்லவராக இருங்கள்: எஸ்.வி.சேகருக்கு கமல் கட்சி கண்டனம்

சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் குறித்து விமர்சனம் செய்த நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகருக்கு பதிலடி தரும் வகையில் அக்கட்சியில் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தனுஷின் 'பட்டாஸ்' ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ தகவல்

தனுஷ் நடித்த 'அசுரன் மற்றும் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில் இந்த இரண்டு படங்களில் 'அசுரன்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி

ஒரு வாரத்தில் விசாரணை, 21வது நாளில் தூக்கு: ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி

பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்முறை செய்யும் குற்றவாளிகள் குறித்த வழக்குகளை நீடிப்பதும் அதன் பின்னர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டாலும்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகும் பிரபல நடிகர்

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டுமன்றி அனைத்து மொழிகளிலும் சிறப்பான வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.