உங்களுக்கு தான் தெரியுமே இந்திய சட்ட அமைப்பு... நடிகையின் தற்கொலை குறித்து சின்மயி காட்டமான பதிவு..!

  • IndiaGlitz, [Tuesday,December 12 2023]

ஜூனியர் நடிகை ஒருவரின் தற்கொலை குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள பாடகி சின்மயி ’உங்களுக்கு தான் தெரியுமே, இந்திய சட்ட அமைப்பை பற்றி’ என்று ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார்.

‘புஷ்பா’ படத்தில் நடித்த ஜெகதீஷ் என்பவர் ஜூனியர் நடிகை ஒருவரை பாலியல் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அந்த ஜூனியர் நடிகை தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்திற்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மத்தியில் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில் சின்மயி தனது சமூக வலைதளத்தில் இது குறித்து காட்டமாக பதிவு செய்துள்ளார். ’இந்தியாவின் முதல் பாலியல் துன்புறுத்தல் நிவர்த்தி குழுவை கொண்ட அமைப்புதான் தெலுங்கு திரை உலக பிலிம் சேம்பர். இறந்து போன அந்த நடிகைக்கு தனது உரிமைகள் பற்றிய தெரிந்திருக்கும் என்றால், அவருக்கு சட்ட ரீதியான உதவி கிடைத்திருந்தால், அவர் இந்நேரம் பாதுகாப்பாக இருந்திருப்பார்.

ஒரு பெண்ணை பிளாக்மெயில் செய்வது எளிது என ஒரு ஆண் நினைத்ததால் தான் இன்று அந்த பெண் இறந்திருக்கிறார். நமது சமூகம் பெண்கள் குறித்து தவறாக சொல்லிக் கொடுத்திருக்கிறது. இந்த வழக்கு இன்னும் பல ஆண்டுகள் நடக்கும், அந்த நபர் ஜாமீன் கிடைத்து நாளையே வெளியே வர வாய்ப்பு இருக்கிறது. உங்களுக்கு தான் தெரியுமே இந்திய சட்ட அமைப்பை பற்றி’ என்று தன்னுடைய கோபத்தை ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

More News

2 போட்டியாளர்களுக்கு டிக்கெட் டு ஃபினாலே.. பிக்பாஸ் வைத்த பரபரப்பான டாஸ்க் இதுதான்..!

 பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் டிக்கெட் டு ஃபினாலே என்ற டாஸ்க் வைக்கப்படும் என்பதும் அந்த டாஸ்க்கில் வெற்றி வருபவர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார் என்பதும் தெரிந்ததே.

கடந்த ஆண்டு இதே தலைவர் பிறந்த நாளில்.. கார்த்திக் சுப்புராஜின் பதிவு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல அரசியல்வாதிகளும்,

ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின், அண்ணாமலை மற்றும் பிரபலங்கள்..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கமல் சார் திட்டின உடனே என்ன ஆச்சு பாரு? அர்ச்சனா குறித்து நிக்சன் கூறியது என்ன?

 விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 70 நாட்களுக்கு மேல் நடந்து வரும் நிலையில் இந்த சீசனில் மட்டும்  பல்வேறு விமர்சனங்கள் எழுந்து உள்ளன என்பதை பார்த்து வருகிறோம்

2023ல் கூகுளில் தேடப்பட்ட திரைப்படங்கள்.. ரஜினி, விஜய்யை முந்திய அட்லி..!

 உலக அளவில் கூகுளில் 2023 ஆம் ஆண்டு தேடப்பட்ட திரைப்படங்கள் பட்டியலில் ரஜினியின் 'ஜெயிலர்' விஜய்யின் 'லியோ' படங்களை விட அட்லியின் 'ஜவான்' படம் முந்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது