கதறி அழுத சின்மயி: காரணம் என்ன?

  • IndiaGlitz, [Monday,December 31 2018]

பாடகி சின்மயி தமிழகத்தில் 'மீடூ' என்ற ஹேஷ்டேக்கை ஆரம்பித்து வைத்த நிலையில் அவருக்கு ஆதரவாக இருந்தவர்களின் எண்ணிக்கைக்கு சம அளவில் அவருடைய மீடூ குற்றச்சாட்டை எதிர்க்கவும் ஒரு கூட்டம் உள்ளது

இந்த நிலையில் 'மீடூ' குறித்த பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி பேட்டி ஒன்றில் தெரிவித்தபோது, 'இதுவொரு கீழ்த்தரமான விளம்பர யுக்தி. என்றைக்கோ நடந்தது, நடக்காதது, நடந்திருக்க வேண்டியது அனைத்தையும் வெளியே சொல்வது தேவையா? இந்த மீடு குற்றச்சாட்டால் சாதிப்பது என்ன? அது குற்றம் சுமத்துபவரின் குடும்பத்தை தான் பாதிக்குமே தவிர வேறு ஒன்றும் இல்லை. இதுவொரு கேவலமான செய்கை. நான் ஒரு பெண்ணியவாதிதான் ஆனால் இதுபோன்ற செயல்களுக்கு என்றைக்கும் ஆதரவு தரமாட்டேன்' என்று கூறியுள்ளார்.

செளகார் ஜானகியின் இந்த பேட்டி குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து கூறிய சின்மயி, 'செளகார் ஜானகியின் இந்த பேட்டியை பார்த்து நான் கதறி அழுதேன். குறிப்பாக 'நடந்தது நடக்காதது' என்பது என மனதை புண்படுத்திவிட்டது. மீடு குற்றவாளிகளுக்கு இன்னும் எத்தனை பேர் சினிமாவுலகிலேயே ஆதரவு தருவார்கள் என்று பார்ப்போம்' என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

இந்த பேட்டிக்கு கருத்து கூறிய நடிகை சமந்தா, 'துரதிஷ்டவசமாக செளகார் ஜானகி அவர்கள் மீடுவை சரியாக புரிந்து கொள்ளாமல் இந்த பேட்டியை அளித்துள்ளார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

More News

முதல்முறையாக இணையும் த்ரிஷா-ஓவியா

நடிகை ஓவியா நடிப்பில் உருவாகி வரும் '90ml' திரைப்படத்தின் பீர் பிரியாணி' என்ற பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளிவந்துள்ளது என்ற செய்தியை பார்த்தோம்.

நாளை முதல் விஸ்வாசம் ரசிகர்களுக்கு விருந்து ஆரம்பம்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விஸ்வாசம்' திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி பல சாதனைகளை முறியடித்துள்ள நிலையில் இந்த படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

ஜப்பான் ரசிகர்களுக்கும் 'விஸ்வாச' பொங்கல்

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

கஜா புயல் பாதிப்பு: ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய அறிவிப்பு

கடந்த மாதம் கஜா புயல், டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு அழித்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்களும்,

திடீரென இந்தியா திரும்பும் ரோஹித் சர்மா: காரணம் என்ன தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் அந்நாட்டுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்று வருகிறது.