close
Choose your channels

நீச்சல் உடையில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த 'சின்னத்தம்பி' சீரியல் நடிகை!

Monday, June 14, 2021 • தமிழ் Comments

பெரியதிரை நடிகைகள் போல் சர்வசாதாரணமாக சின்னத்திரை நடிகைகள் பிகினியில் தோன்றுவதில்லை என்பதும், வெகு அரிதாகவே சின்னத்திரை நடிகைகள் சமூக வலைதளங்களில் தங்களுடைய பிகினி புகைப்படங்களை பதிவு செய்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’சின்னத் தம்பி’ உள்பட பல சீரியல்களிலும், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்த பவானி ரெட்டி திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் தோன்றியிருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

‘ரெட்டைவால் குருவி’ ’தவணை முறையில் வாழ்க்கை’ உள்ளிட்ட ஒரு சில சீரியல்களில் நடிகை பவானி ரெட்டி நடித்திருந்தாலும் அவருக்கு பெரும் பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது ’சின்னதம்பி’ சீரியல் தான். இந்த சீரியல் 400 எபிசோடுகளை கடந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பவானி ரெட்டி சமீபத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வந்தார். அந்த வகையில் திடீரென தற்போது அவர் நீச்சலுடை புகைப்படங்களை பதிவு செய்ததை அடுத்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

Get Breaking News Alerts From IndiaGlitz