சூர்யா 37: அல்லு சிரிஷூகு பதில் ஒப்பந்தமான பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,August 14 2018]

நடிகர் சூர்யா நடிப்பில் பிரபல இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கி வரும் 'சூர்யா 37' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் முடிவடைந்து விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த படத்தில் மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, அல்லுசிரிஷ் உள்பட பல நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வேறொரு படத்திற்கு கொடுத்த கால்ஷீட் காரணமாக அல்லுசிரிஷ் 'சூர்யா 37' படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். எனவே அல்லுசிரிஷூகு பதில் வேறொரு நடிகரை தேர்வு செயும் பணியில் கடந்த சில நாட்களாக இயக்குனர் கேவி ஆனந்த் ஈடுபட்டிருந்தார்

இந்த நிலையில் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் சிராஜ் ஜானி என்பவர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சிராஜ் ஜானி பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.