close
Choose your channels

மோகன் ராஜாவின் மேஜிக் டச்சில் 'காட்ஃபாதர்' : சிரஞ்சீவிக்கு சூப்பர் வெற்றி!

Thursday, October 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மோகன் ராஜாவின் மேஜிக் டச் இயக்கத்தில் உருவான ’காட்ஃபாதர்’ திரைப்படம் சிரஞ்சீவிக்கு ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது.

ஜெயம் ரவி நடித்த ’ஜெயம்’ முதல் வேலைக்காரன் வரை பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய மோகன் ராஜா பெரும்பாலும் ரீமேக் படங்களை இயக்கி அதில் வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடித்த ’தனி ஒருவன்’ என்ற ஒரிஜினல் ஸ்கிரிப்ட் கதையை உருவாக்கி தான் ஒரு ரீமேக் இயக்குனர் மட்டுமல்ல, ஒரிஜினல் ஸ்கிர்ப்டிலும் கிங் என்பதை நிரூபித்தார்.

இந்த நிலையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் உருவான ’லூசிஃபர்’ என்ற படத்தின் ரீமேக் படமான ’காட்ஃபாதர்’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தெலுங்கு திரையுலகில் மோகன்ராஜா அறிமுகமானார்.

சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா நடித்த இந்த படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அதுமட்டுமன்றி வசூலையும் குவித்து வருகிறது. இதுவரை இந்த படம் உலகம் முழுவதும் 30 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டிவிடும் என்றும் டிரேடிங் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

’சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற சுமாரான வெற்றி படத்தையும், ’ஆச்சார்யா’ என்ற தோல்வி படத்தையும் கொடுத்த சிரஞ்சீவிக்கு தற்போது ’காட்ஃபாதர்’ திரைப்படம் ஒரு சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமைந்துள்ளதற்கு மோகன் ராஜாவின் இயக்கமே காரணமாகும்.

’லூசிஃபர்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் படமாக ’காட்ஃபாதர்’ இருந்தாலும் கதை மற்றும் திரைக்கதையை தனக்கே உரிய பாணியில் முத்திரை பதித்துள்ள மோகன் ராஜாவின் சிறப்பான பணியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

’வேலைக்காரன்’ திரைப்படத்திற்கு பிறகு 5 ஆண்டுகள் கழித்து மோகன் ராஜாவின் திரைப்படம் வெளியாகி உள்ளதை அடுத்து ரசிகர்கள் இந்த படத்தை விரும்பிப் பார்த்து வருகின்றனர்.

சிரஞ்சீவி, நயன்தாரா, சல்மான் கான் உள்பட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் சூப்பர் வெற்றியால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.