close
Choose your channels

ராம்சரண் தேஜாவின் 1 வயது, 37 வயது புகைப்படங்களை பகிர்ந்த சிரஞ்சீவி!

Sunday, March 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருடைய ஒரு வயது மற்றும் 37வது வயதுப் புகைப்படங்களை அவருடைய தந்தை சிரஞ்சீவி பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’மாவீரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ராம்சரண் தேஜா. இவர் நடித்த ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது

இந்த நிலையில் இன்று ராம் சரண் தேஜா தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ராம் சரண் தேஜாவின் தந்தையும் மெகாஸ்டார் நடிகருமான சிரஞ்சீவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ராம் சரண் தேஜா ஒரு வயதாக இருக்கும் போது எடுத்த புகைப்படத்தையும், அதேபோன்று 37வது வயதில் இருந்தபோது எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.