'சியான் 62' படப்பிடிப்பு எப்போது? விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு குஷி தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,December 16 2023]

நடிகர் விக்ரம் நடித்த ’துருவ நட்சத்திரம்’ மற்றும் ’தங்கலான்’ ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் 62 வது திரைப்படத்தை எஸ்யு அருண்குமார் இயக்க உள்ளார் என்ற படத்தை பார்த்தோம்.

சமீபத்தில் வெளியான ’சித்தா’ என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கி அருண்குமார் அடுத்ததாக விக்ரமுடன் கைகோர்த்ததை அடுத்த இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படும் நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

’சித்தா’ போலவே ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

ஹீரோவாக தோத்தவன் இருக்கலாம், வில்லனாக தோத்தவன் யாரும் இல்லை: பிக்பாஸ் டைட்டில் வின்னர்..!

 பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர்  சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது 'ஹீரோவாக நடித்த தோத்தவன் இருக்கலாம் ஆனால் வில்லனாக நடித்த தோத்தவன் யாரும் இல்லை'

தமிழ் புரியாதவர்களுக்கு இந்த முக்கிய செய்தி: பிரகாஷ்ராஜ் பதிவு செய்த பரபரப்பு ட்விட்..!

நடிகர் பிரகாஷ்ராஜ் மீது சுமத்தப்பட்ட மோசடி புகார் பொய்யானது என தமிழ் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ள நிலையில் தமிழ் புரியாதவர்களுக்காக என இந்த செய்தியை நடிகர் பிரகாஷ் ராஜ்

முன்னணி ஹீரோவுடன் முதல்முறையாக இணையும் யோகிபாபு.. த்ரில் காமெடி படம் என தகவல்..!

நடிகர் யோகி பாபு கிட்டத்தட்ட தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முடித்துவிட்ட நிலையில் தற்போது தெலுங்கின் முன்னணி ஹீரோவின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாகவும்

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு துபாயில் கொலை மிரட்டலா? என்ன நடந்தது?

நடிகை பூஜா ஹெக்டே துபாய்க்கு கடை திறப்பு விழாவுக்கு சென்றபோது அங்கு அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.  

'விடாமுயற்சி' முதல்கட்ட பிசினஸ் ரூ.250 கோடியா? ஆச்சரியத்தில் கோலிவுட்..!

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் பிசினஸ் தொடங்கி விட்டதாக தகவல்