close
Choose your channels

சீயான் விக்ரமின் 'மஹான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு?

Monday, January 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் இணைந்து நடித்த ‘மஹான்’ திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார் என்பதும் இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் தெரிந்ததே.

சமீபத்தில் இந்த படம் சென்சார் செய்யப்பட்டது என்பதும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் வழங்கினார்கள் என்பதும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 163 நிமிடங்கள் என செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ‘மஹான்’ திரைப்படம் அமேசான் ஓடிடியில் நேரடியாக ரிலீசாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது பிப்ரவரி 10ஆம் தேதி ‘மஹான்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் அமேசானில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக இன்று மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், துருவ் விக்ரம், வாணிபோஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.