வீட்டில் பணியாற்றும் ஊழியரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட சீயான் விக்ரம்

  • IndiaGlitz, [Monday,September 12 2022]

சீயான் விக்ரம் வீட்டில் நாற்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வரும் பணிப்பெண் மேரியின் இல்லத் திருமணத்தில், சீயான் விக்ரம் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.

ரசிகர்களின் அன்பிற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கும் நட்சத்திரங்களில் முன்னிலையில் இருப்பவர் சீயான் விக்ரம். ரசிகர்களையே குடும்ப உறவாக கருதும் சீயான் விக்ரம், அவருடன் பணியாற்றும் சக ஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் சுப வைபங்களிலும் கலந்துகொள்வது வழக்கம்.

இந்நிலையில் சீயான் விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். அவரது மனைவியான மேரி என்பவரும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது வீட்டில் பணியாற்றி வருகிறார். இவர்களது வாரிசான தீபக் என்பவருக்கும், மணமகள் வர்ஷினி என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற தீபக் - வர்ஷினியின் திருமணத்தில் சீயான் விக்ரம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார். இதன் போது சீயான் விக்ரமின் ரசிகர்களும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும் உடனிருந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
 

More News

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு நடிகை அனுஷ்கா ரசிகையா? ஆச்சரிய தகவல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றுக்கு தான் மிகப்பெரிய ரசிகை என நடிகை அனுஷ்கா அந்த சீரியலில் நடித்த நடிகைக்கு போன் செய்து பாராட்டியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

படப்பிடிப்பு முடிவதற்குள் வியாபாரத்தை முடித்த 'வாரிசு' படக்குழு: இதுவரை எத்தனை கோடி தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி இயக்கத்தில், தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில், இசையமைப்பாளர் தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'வாரிசு' . விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வரும்

'விக்ரம்' படத்தில் அந்த முக்கிய காட்சியை எடுக்க மறந்துவிட்டோம்.. நடிகை காயத்ரி

'விக்ரம்' படத்தில் ஒரு முக்கிய காட்சியை எடுக்க மறந்து விட்டோம் என அந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

செஞ்சிடாதிங்கடா இந்த போட்டோவை... தனி விமானத்தில் மனைவியுடன் சென்ற ரவீந்தர்!

தனி விமானத்தில் தனது மனைவியுடன் சென்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ள தயாரிப்பாளர் ரவீந்தர் இந்த தயவுசெய்து இந்த போட்டோவை யாரும் அப்படி போடாதீங்கடா, செஞ்சிடாதிங்கடா' என பதிவு செய்துள்ளது

பீச்சில் பிகினி உடையுடன் பிறந்த நாள் கொண்டாடிய ஸ்ரேயா.. குழந்தையுடன் விளையாடும் செம வீடியோ!

நடிகை ஸ்ரேயா சரண் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், குழந்தையுடன் பீச்சில் பிகினி உடையுடன் செம ஜாலியாக விளையாடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.