சீயான் விக்ரமின் 'மகான்' படத்தின் மாஸ் அறிவிப்பு!

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்த திரைப்படம் ‘மகான்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ‘மகான்’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் கேரக்டரின் புதிய போஸ்டர்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த மாஸ் அறிவிப்பு சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ’சூறையாட்டம்’ என்ற சிங்கிள் பாடல் வரும் 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதர்ஷனுடன் சமந்தா: வைரல் புகைப்படங்கள்!

முன்னணி நடிகைகளான த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் உடன் எடுத்த புகைப்படத்தை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான

பிக்பாஸ் டைட்டில் வின்னரை மறுமணம் செய்ய போகிறாரா நடிகை மேக்னாராஜ்?

பிக்பாஸ் டைட்டில் வின்னரை நடிகை மேக்னா ராஜ் மறுமணம் செய்யப் போவதாக பரவி வரும் வதந்தியால் கன்னட திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஆறு விருதுகளை அள்ளிக்குவித்த சூர்யாவின் 'சூரரைப்போற்று' 

பிரபல நடிகர் சூர்யாவின் 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த திரைப்படத்தை திரையுலகினர் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்': டெல்லி படப்பிடிப்பு குறித்த மாஸ் தகவல்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'பீஸ்ட் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்றது என்பதும், அதன் பின்னர் மூன்று கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் அடுத்தடுத்து நடைபெற்றது

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்: பிரபல நடிகரின் பட டைட்டில்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ஒருவர் நடிக்கும் திரைப்படத்திற்கு 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது